திருமணத்தை திடீரென நிறுத்திய எதிர் வீட்டு ஹீரோயின் என்ன இப்படி ட்வீட் போட்டிருக்காரு?
சென்னை: நடிகர் தனுஷின் பட்டாஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மெஹ்ரீன் பிர்சடா.
26 வயதாகும் இந்த இளம் நடிகை கடந்த மார்ச் மாதம் தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில், திடீரென சமீபத்தில் தனது திருமணத்தை நிறுத்துவதாக அதிரடியாக மெஹ்ரீன் பிர்சடா ட்வீட் போட்டு பரபரப்பை கிளப்பினார்.

பஞ்சாபி பால்கோவா
பஞ்சாப் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இவர் டோலிவுட் படமான கிருஷ்ணா காடி வீர பிரேம கதா படத்தின் மூலம் 2016ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். பில்லவுரி எனும் பாலிவுட் படத்திலும் இவர் நடித்துள்ளார். நெஞ்சில் துணிவிருந்தால் எனும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமான நோட்டா படத்திலும் இந்த பஞ்சாபி பால்கோவா தான் ஹீரோயின்.

எதிர்வீட்டு ஹீரோயின்
ஏற்கனவே இரண்டு தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், ரசிகர்கள் மனங்களை மெஹ்ரீன் பிர்சடா பிடித்தது நடிகர் தனுஷின் பட்டாஸ் படத்தில் தான். அந்த படத்தில் இடம்பெற்ற எதிர்வீட்டு ஹீரோயின் பாடல் அனைத்து இளைஞர்களின் ஹாட் ஃபேவரைட் பாடலாக மாறியது.

திருமண நிச்சயம்
இந்த ஆண்டு மார்ச் மாதம் தொழிலதிபர் பாவ்யா பிஷ்னாய் என்பவருடன் ஜெய்ப்பூரில் செம ராயலாக இவரது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இருவருக்கும் திருமணமே ஆனது போல படு நெருக்கமாக ராஜா ராணி போல இருந்த புகைப்படங்கள் எல்லாவற்றையும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்திருந்தார் மெஹ்ரீன்.

கல்யாணம் வேண்டாம்
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், நடிகை மெஹ்ரீன் பிர்சடாவின் திருமணம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்றும், தனது நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் அறிவித்தார்.

என்கிட்டயே கத்தி இருக்கு
"The most dangerous woman of all is the one who refuses to rely on your sword to save her because she carries her own" (உலகிலேயே மிகவும் ஆபத்தான பெண் என்பவள் யார் என்றால், எவள் ஒருத்தி உன் வாள் வேண்டாம் எனக் கூறுகிறாளோ அவளை தற்காத்துக் கொள்ளும் கத்தி அவளிடமே உள்ளதாக அர்த்தம்) என்கிற ரீதியில் தற்போது ட்வீட் போட்டு வைரலாக்கி உள்ளார்.

மறைமுகமாக பதில்
திருமணம் வேண்டாம் என திடீரென நிறுத்திய நிலையில், நடிகை மெஹ்ரீன் பிர்சடா இப்படி தொடர்ந்து சமூக வலைதளங்களில் தத்துவங்களாக ட்வீட் போட்டு வருவது யாருக்கோ மறைமுகமாக பதில் சொல்வது போல உள்ளதே என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஆண் துணையில்லாமல் பெண்களால் வாழ முடியும் என்கிற மெஹ்ரீன் பிர்சடாவின் இந்த துணிச்சலான ட்வீட்டுக்கு ஆதரவும் பெருகி வருகிறது.


Click it and Unblock the Notifications











