»   »  கவிதை போல ஒரு நாயகி.. மெல்லத் திறந்தது மனசு!

கவிதை போல ஒரு நாயகி.. மெல்லத் திறந்தது மனசு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜ்மல் - நிக்கிதா இணைந்து நடிக்க உருவாகியுள்ளது மெல்லத் திறந்தது மனசு.

கவிதை போன்ற நாயகியாக இந்தப் படத்தில் நிக்கிதா நடிக்க, அவருக்கு ஜோடி போட்டுள்ளார் அஜ்மல். இந்தப் படத்தை டிவி சினி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் டி.வெங்கடேஷ் தயாரித்துள்ளார்.

தெலுங்கில் வந்த மெல்லக தட்டின்டி...

தெலுங்கில் வந்த மெல்லக தட்டின்டி...

தெலுங்கில் "மெல்லக தட்டின்டி மனசு தலுப்புலு" என்ற பெயரில் வெளியான படமே தமிழில் "மெல்ல திறந்தது மனசு" என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அழகிய நிக்கிதா...

அழகிய நிக்கிதா...

இந்த படத்தில் அஜ்மல் நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நாயகியாக நிக்கிதா நடிக்கிறார். அழகிய நிக்கிதா ஒரு கவிதை போல படம் முழுக்க வருவாராம்.

மற்றும் சத்யா, தனுஜா, பரிமளா...

மற்றும் சத்யா, தனுஜா, பரிமளா...

மேலும் இப்படத்தில் சத்யா, தனுஜா, பரிமளா, நந்தனா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, இயக்கம் - வம்சி. படம் பற்றி இயக்குனர் வம்சியிடம் கேட்டோம்....

இவள்தான் உன் மனைவி...

இவள்தான் உன் மனைவி...

சிறு வயதில் தனக்கு மனைவியாக வரபோவது இவள்தான் என்று ஒரு பெண்ணை பெரியோர்கள் சொல்லிவிடுகிறார்கள். அஜ்மல் வளர்ந்து பெரியவராக வந்த பிறகு அஜ்மல் வேறு இடத்திலும் அந்த பெண் எங்கு இருக்கிறார் என்றும் அஜ்மலுக்கு தெரியாமல் போய் விடுகிறது.

ஊர் ஊராகப் போகிறார்...

ஊர் ஊராகப் போகிறார்...

இடையில் அஜ்மலை ஒருதலையாக காதலிக்கிறார் ஒரு பெண். அந்தக் காதலை ஏற்கவில்லை அஜ்மல். தனக்கு மனைவியாக வரவேண்டிய அந்த சிறு வயதில் சொல்லிய பெண்ணை தேடி ஊர் ஊராக சென்று தேடுகிறார்.

முழுக்க முழுக்க காதல் மட்டுமே...

முழுக்க முழுக்க காதல் மட்டுமே...

அந்த பெண்ணை தேடி கண்டு பிடித்தாரா இல்லையா என்பது படத்தின் கிளைமாக்ஸாம். முழுக்க முழுக்க காதல் மட்டுமே இருக்கும் இந்த " மெல்ல திறந்தது மனசு " படத்தில் என்றார் வம்சி.

English summary
Mella Thiranthathu Manasu is an upcoming tamil movie directed by Vamsi. The movie is expected to release by late 2015.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil