»   »  நாயகியின் கண்ணீருடன் வெளியானது மெல்லிசை பாடல்கள்

நாயகியின் கண்ணீருடன் வெளியானது மெல்லிசை பாடல்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மெல்லிசை படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.இயக்குநர் ராம், கார்த்திக் சுப்புராஜ், மாகாபா ஆனந்த், இயக்குநர் தாமிரா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டனர்.

விஜய் சேதுபதி - காயத்ரி நடித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதியின் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் மெல்லிசையும் ஒன்றாக ரசிகர்கள் மத்தியில் மாறியிருக்கிறது.

Mellisai Audio Launch

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை காயத்ரி பேசும்போது மெல்லிசை படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும். அதிகமாக எதிர்பார்க்கும் படம் மெல்லிசை, இப்படம் நிச்சயம் எனக்குப் பெரிய பெயர் வாங்கித்தரும்".

என்று சிலவரிகள் பேசியவர் அழ ஆரம்பித்து விட்டார் தொடர்ந்து அவரால் மேலே பேசமுடியவில்லை எனவே அவரது இருக்கைக்கு சென்றுவிட்டார்.

பின்னர் நாயகன் விஜய் சேதுபதியும், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியும் அவரை சமாதானப்படுத்தினர்.இப்படத்திற்காக ஒவ்வொரு காட்சிக்கும் கஷ்டப்பட்டு கவனத்துடன் காயத்ரி நடித்திருக்கிறார்.

இவரின் உழைப்பே கண்ணீருக்குக் காரணம் என்று இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தனது பேச்சின் நடுவே காயத்ரியின் அழுகைக்கான காரணத்தை குறிப்பிட்டார்.

மெல்லிசை படத்தின் இசை மற்றும் பாடல்களை படக்குழுவினர் மேடையில் வெளியிட்டனர். மேலும் நாயகன் விஜய் சேதுபதிக்கு பெரிய மாலை அணிவித்து படக்குழுவினர் அவரை கவுரவித்து மகிழ்ந்தனர்.

விழாவிற்கு பெரிய அரிவாள் மீசையுடன் வந்திருந்த விஜய் சேதுபதி நடிகை காயத்ரியுடன் இணைந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மற்றும் ரம்மி ஆகிய படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vijay Sethupathi's Mellisai Audio Released Today. Mellisai is on Upcoming Action Film Starring Vijay Sethupathi and Gayathrie, Directed by Ranjit Jeyakodi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil