»   »  முத்தக்காட்சியை நீக்கிய பிறகு யு பெற்ற மேல் நாட்டு மருமகன்!

முத்தக்காட்சியை நீக்கிய பிறகு யு பெற்ற மேல் நாட்டு மருமகன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்சார் பற்றிய புலம்பல்கள் கோடம்பாக்கத்தில் ரொம்பவே கேட்க ஆரம்பித்துவிட்டன. முத்தக் காட்சி இருந்தால் கூட இனி ஏ தான் என்று சென்சார் கெடுபிடி காட்டுவதால், அந்தக் காட்சிகளை நீக்க வேண்டியுள்ளதாம்.

சமீபத்தில் அப்படி சென்சாரில் மாட்டிய படம் மேல் நாட்டு மருமகன்.
உதயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கும் இந்தப் படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடிக்கிறார். பிரான்சில் இருந்து ஆண்ட்ரீயா என்னும் வெள்ளைக்காரப் பெண் நாயகியாக அறிமுகமாகிறார்.

Melnaattu Marumagan gets U after chop a lip lock scene

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் எம்.எஸ்.எஸ் இந்தப் படம் மற்றும் சென்சார் பற்றிக் கூறுகையில், "ஒவ்வொருவரும் பணம் சம்பாதிக்க பல நாடுகள் பறந்தாலும். பண்பாட்டுக்கும், கலாச்சாரத்துக்கும் நம்ம நாட்டை மிஞ்ச எந்த நாடும் இல்லை என்பதே இந்த படத்தின் கரு.

படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிந்து விட்டது. சென்சார் அதிகாரிகளுக்கு படத்தை திரையிட்டோம். படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் ஒரு வசனத்தையும், நாயகன், நாயகி நடித்த முத்தக்காட்சியையும் நீக்கினால்தான் யூ சான்றிதழ் கொடுப்போம் என்று கூறினார்கள். நானும் முத்தக்காட்சியை நீக்குகிறேன் என்று கூறிவிட்டேன். அந்த வசனத்தை நீக்கி வேறொரு வசனத்தைக் குறிப்பிட்டேன். அதையே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி, யூ சான்றிதழ் வழங்கினார்கள்," என்றார்.

English summary
Melnaattu Marumagan has got U certificate in Censor after removed a liplock scene.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil