twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொதுக்குழுவில் நடிகர் சங்க தேர்தலை நடத்த வேண்டாம் என்றனர்: நாசர்

    By Siva
    |

    சென்னை: நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் தேர்தல் வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர் என்று நாசர் தெரிவித்துள்ளார்.

    நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. நாசர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கு பிறகு நடிகர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது,

    நாசர்

    நாசர்

    நாங்கள் யாரையும் எதிரிகளாக நினைக்கவில்லை. இந்த மூன்று ஆண்டு பயணத்தை ஏற்படுத்திக் கொண்ட அனைவருக்கும் நன்றி. மீடியாவுக்கு நன்றியை தெரிவிக்கிறோம். அரங்கில் இருந்த அனைவரும் தேர்தல் வேண்டாம் என்றார்கள். தேர்தல் நடத்த வேண்டும் என்று தான் இருக்கிறோம். குறைந்தது 6 மாதமாவது தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். சட்டத்திற்கு உட்பட்டு அதை செய்வோம் என்றார் நாசர்.

    பொன்வண்ணன்

    பொன்வண்ணன்

    பொதுக்குழுவில் எடுக்கப்பட்டுள்ள முடிவு கூட்டத்திற்கு வராதவர்களுக்கும் பொருந்தும். தேர்தல் வேண்டும் என்று ஒருவர் கூட கை தூக்கவில்லை. ரூ. 35 கோடி செலவில் நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பதவிக்காக எதையும் செய்ய மாட்டோம். எதையும் சட்டப்படியே செய்வோம். அக்டோபர் 18ம் தேதி தான் பதவிக்கு வந்தோம். இன்னும் மூன்று மாதம் இருக்கிறது. கட்டிடத்திற்கு நிதி திரட்ட நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். எங்கள் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிரூபிக்க தயார் என்றார் பொன்வண்ணன்.

    விஷால்

    விஷால்

    நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் கூறியதாவது, எங்கள் பதவிக்காலம் அக்டோபரில் முடிகிறது. மார்ச் மாதம் நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க முடிவு செய்துள்ளோம். சங்க கட்டிடத்தில் பெரிய அரங்கம் கட்டி வருகிறோம். அடுத்த பொதுக்குழு அங்கு தான் நடக்கும் என்றார்.

    கார்த்தி

    கார்த்தி

    வீடு கட்டிப் பாருங்க அப்ப புரியும். கட்டடப் பணியை துவங்கினால் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும். அதற்கு அதே ஆட்கள் பணியாற்ற வேண்டும். தேர்தல் வந்தால் 3 மாதத்திற்கு நான் செக்கில் கையெழுத்திட முடியாது, கட்டிடப் பணிகள் நின்றுவிடும். ஸ்டீல், கான்கிரீட் சேர்ந்து வலுவான கட்டிடமாக கட்டி வருகிறோம் என்றார் கார்த்தி.

    English summary
    Nadigar Sangam president Nasser said that people who have attended the general body meet have requested not to conduct election.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X