twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Meme Boys Review: லோ பட்ஜெட் டான்.. 8 எபிசோடு நீளம்.. மீம் பாய்ஸ் வெப்சீரிஸ் விமர்சனம்!

    |

    சென்னை: 96 படத்தில் இளம் வயது விஜய்சேதுபதியாக வந்து நடிப்பில் அசத்திய ஆதித்யா பாஸ்கர் (எம்.எஸ். பாஸ்கரின் மகன்) இந்த வெப்சீரிஸில் மோகன் ஜோதி பாபு சுருக்கமாக மோஜோ என்கிற கதாபாத்திரத்தில் மீம் போடுபவராக நடித்துள்ளார்.

    Recommended Video

    Meme Boys Review | Yessa ? Bussa ? | MEME BOYS 2022 Tamil Webseries Review MemeBoys Tamil | *Review

    சிவகார்த்திகேயனின் டான் படத்தில் ஸ்டூடன்ட்டுக்கும் டீனுக்கும் நடக்கும் அதே கேட் அண்ட் மவுஸ் கேம் தான் இங்கேயும் நடக்குது, ஆனால், ஆன்லைனில்.

    சோனி லைவ்வில் வெளியாகி உள்ள 8 எபிசோடுகள் கொண்ட இந்த மீம் பாய்ஸ் வெப்சீரிஸை அருண் கெளசிக் இயக்கி உள்ளார். ஓடிடி ரசிகர்களுக்கு இது வொர்த்தா? இல்லையா? என்பது குறித்து இங்கே விரிவாக பார்ப்போம்..

    வேல இல்லாம சும்மா இருக்குறது எப்படின்னு நீ கத்துக்கிட்டடா... ரஜினியிடம் சிவாஜி ஏன் கூறினார் தெரியுமா?வேல இல்லாம சும்மா இருக்குறது எப்படின்னு நீ கத்துக்கிட்டடா... ரஜினியிடம் சிவாஜி ஏன் கூறினார் தெரியுமா?

    என்ன கதை

    என்ன கதை

    ஒரு பெரிய மீம் போட்டியில் வெற்றிப் பெற்றால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பதால், தனது மீம் பாய்ஸ் டீமுடன் நல்ல கன்டென்ட் தேடும் நாயகன் மோஜோ தனது கல்லூரியில் நடக்கும் அட்டூழியங்களையும் டீன் நாராயணனையும் (குரு சோமசுந்தரம்) பங்கம் பண்ண போடும் மீம்களும், அதன் பிறகு அவர்களுக்கு எற்படும் பிரச்சனைகள் மற்றும் கடைசியில் அந்த போட்டியில் அவர்கள் வென்றார்களா? இல்லையா? என்பது தான் மீம் பாய்ஸ் வெப்சீரிஸின் கதை.

    லோ பட்ஜெட் டான்

    லோ பட்ஜெட் டான்

    சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தின் கதை போலவே இந்த மீம் பாய்ஸ் உள்ளது. அந்த படமே நண்பன் படத்தின் காப்பி என ட்ரோல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. டீனாக வரும் சோமசுந்தரம் அப்படியே எஸ்.ஜே. சூர்யாவையும் ராதாரவியையும் சேர்ந்து செய்த கலவையாக உள்ளார். அபூர்வா எனும் கல்லூரியில் நடக்கும் விஷயங்களை பற்றியே இந்த தொடர் செல்வதால் மீம் கிரியேட்டர்களே இந்த வெப்சீரிஸை வைத்து ஏகப்பட்ட மீம்களை போட வாய்ப்புள்ளது.

    காமெடி இருக்கா

    காமெடி இருக்கா

    வடிவேலு மீம் இல்லாத நாளே சோஷியல் மீடியாவில் இருப்பவர்களுக்கு இல்லை என்கிற அளவுக்கு மீம்கள் நம் வாழ்க்கையுடன் ஒட்டிப் போயிருக்கிறது. பெரிய ஒரு அரசியல் நிகழ்வு அல்லது சம்பவத்தை எளிதாக மீம் போட்டு அதை பார்த்த உடனே மக்களை சிரிக்க வைப்பது தான் மீம் க்ரியேட்டர்களின் வெற்றியே. ஆனால், இந்த மீம் பாய்ஸ் வெப்சீரிஸில் சில மீம்கள் மற்றும் ட்ரோல்களுக்கு சிரிப்பு வந்தாலும், பெரியளவில் காட்சிகள் மூலம் ரசிகர்களை சிரிக்க வைக்கவில்லை இயக்குநர்.

    ரொம்ப லெந்தா போகுதே

    ரொம்ப லெந்தா போகுதே

    ஒரு சின்ன கதையை எடுத்துக் கொண்டு அதை எந்த அளவுக்கு பூமர் பபுள்கம் போல இழுக்க முடியுமோ அந்த அளவுக்கு இழுத்தடித்து பார்வையாளர்களை போதும்டா சாமி என சொல்லும் அளவுக்கு இயக்குநர் சோதித்து விட்டார். நடிகர்களான ஆதித்யா பாஸ்கர், அவரது மீம் பாய்ஸ் டீம், டீனாக நடித்துள்ள குரு சோமசுந்தரம், அவரது அசிஸ்டன்ட் படவா கோபி என நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்திருந்தாலும், இந்த கதைக்கு 8 எபிசோடு ஓவர்ப்பா, ஒரு 4 முதல் 6 எபிசோடுகள் இருந்திருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

    பிளஸ்

    பிளஸ்

    இந்த வெப்சீரிஸில் வரும் ஒரு வீடியோ மீம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது மிகப்பெரிய பலம் என்றே சொல்லலாம். அந்த ஒரு காட்சிக்காகவே இந்த வெப்சீரிஸை பார்க்கலாம். மீம் பாய்ஸ் என டைட்டில் வைத்து விட்டு பெண் இல்லை என்றால் எப்படி என ஜூலி கதாபாத்திரத்தில் நம்ரதா எனும் நடிகையை அழகாக கதையில் சேர்த்த விதம் ரசிக்க வைக்கிறது. மீம்களை போலவே கதையும் அழுத்தமாக இல்லாமல், மேலோட்டமாக செல்லும் விதமாக இயக்குநர் இயக்கி உள்ளார். அது பிளஸ் ஆகவும் அதே சமயம் மைனஸ் ஆகவும் மாறி விடுகிறது.

    மைனஸ்

    ஒரு ஷார்ட் ஃபிலிம்க்கான சப்ஜெக்ட் அல்லது படத்துக்கான சப்ஜெக்ட்டை நீட்டி முழக்கி 8 எபிசோடுகளாக சொல்லி இருப்பது மிகப்பெரிய மைனஸ் ஆக மாறி உள்ளது. 10 ஜோக்குகள் வந்தால், அதில் 2 ஜோக்குகள் மட்டுமே சிரிக்க வைப்பதும் மிகப்பெரிய மைனஸ் தான். இயக்குநர் பல இடங்களில் திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்த முயற்சித்து இருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால், அந்த முயற்சி திரையில் கை கொடுக்கவில்லை என்பது பலவீனமாக மாறி விட்டது. வீட்ல வெட்டியா இருந்தா தாராளமா இந்த மீம் பாய்ஸ் வெப்சீரிஸை பார்க்கலாம்! இரண்டரை மணி நேரம் படமே லேக் அடிக்குதுன்னு சொல்றவங்களுக்கு இது செட்டாகாது. மீம் பாய்ஸ் - மொக்க பாஸ்!

    English summary
    Meme Boys Webseries Review in Tamil( மீம் பாய்ஸ் விமர்சனம்): Adhithya Bhaskar and Guru Somasundharam actings only the saving grace of the webseries, its plot and meme jokes ara not upto the mark.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X