twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா அலப்பறைகள்.. சோகங்களை மறந்து சிரிக்க வைத்த.. மீம் கிரியேட்டர்ஸ் !

    |

    சென்னை: கொரோனா சோகத்தை மறந்து நம்மை மீம்கள் மூலம் சிரிக்க வைத்து வருகின்றனர் மீம் கிரியேட்டர்ஸ்.

    கொரன்டைன் நேரங்களை பொழுதுபோக்க பலரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகின்றனர். இவர்கள் அனைவரின் பிரதான பொழுதுபோக்கு என்னவென்றால் அது மீம்கள் தான்.

    நாய் ரசித்து பார்த்த நாய் ரசித்து பார்த்த "தி லயன் கிங்".. அசந்துபோன இணையவாசிகள்.. வேகமாக பரவும் வீடியோ !

    Memes are being made to laugh by Meme Creators

    சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்றவற்றில் தற்போது கொரன்டைன் நேரத்தில் வீட்டில் நாம் என்னவெல்லாம் செய்து வருகிறோம், என்னென்ன இன்னல்களை இந்த நாட்களில் சந்தித்து வருகிறோம் என்பதை எல்லாம் மிக அழகாக ரசனை மிகுந்த வகையில் மீம்களின் வாயிலாக மீம் கிரியேட்டர்கள் மக்களுக்கு கொடுத்து அவர்களை மகிழ்வித்து வருகின்றனர்.

    Memes are being made to laugh by Meme Creators

    பல வேலைகளை பார்த்து கொண்டு தங்களின் பொழுதுபோக்குக்காக மீம் போட துவங்கிய பலர் தற்போது கொரன்டைன் நேரத்தில் வீட்டில் இருப்பதால் தங்கள் கற்பனையை தட்டி விட்டு அதிகமான மீம்களை போட்டு மக்களை மகிழ்வித்து வருகின்றனர் .

    கொரானா பாதிப்பு காரணமாக உலக நாடுகளே ஆட்டம்கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். இந்த நேரத்தில் நமக்கு சற்று ஆறுதல் தருவதாக உள்ளது ஒரு மீம். அதாவது, நான் படித்திருந்தால் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகெல்லாம் வேலைக்கு போய் இருப்பேன். நல்லவேளை நாங்கள் படிக்கவில்லை என்பது போன்ற மீம் வடிவேலுவின் டெம்பிளேட்டுகளுடன் வெளியிட்டுள்ளனர். இந்த மீம்மை பார்த்ததும் கொரோனா சோகத்தை மறந்து சிரிக்க தோன்றுகிறது.

    மேலும் முன்பெல்லாம் வேலைக்கு போக வேண்டியது இருக்கும் அல்லது பள்ளி கல்லூரிகளுக்கு போக வேண்டிய நிலை இருக்கும் ஆனால் தற்போது அது இல்லை என்பதனால், படம் அதிகம் பார்க்கும் பலர் இரவு முழுக்க படம் பார்ப்பதை அழகாக மீம்களின் வாயிலாக கொடுத்துள்ளனர்.

    இந்த ஊரடங்கு நீட்டிக்க பட்டுள்ளதால் சிட்டி 2.0வை வைத்து செல்பேசிகளில் ஊரடங்கு 2.0 என்று வந்த குறுஞ்செய்தியுடன் இணைத்து மீமாக மாற்றி இருக்கிறார்கள். இது போக பனி காலம் முடிந்து கடும் வெயில் காலம் துவங்கி விட்டது. இதனால் மதிய நேரங்களில் கழிப்பறை போனால் என்ன ஆகும் என்பதை வடிவேலுவின் பிரபலமான பட காமெடியுடன் இணைத்து மீம்மாக்கி ரசிக்க வைத்துள்ளனர் .

    80களில் வந்த ரஜினி படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சி ஒன்றை மீம்மாக்கி இவ்வாறு தான் கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும் போது கொரானவுடன் சண்டை செய்கிறோம் என்ற மீம்களில் அதகளம் புரிந்துள்ளனர். கொரன்டனை முடிந்தததும் முதலில் முடி வெட்ட சலூன் போக வேண்டுமா, ஏறிப்போன உடம்பை குறைக்க ஜிம்முக்கு போக வேண்டுமா என்றும், வீட்டிலே இருந்ததால் மனநல மருத்துவரத்தைதான் முதலில் பார்க்க வேண்டும் என்பதை அழகாக மீமாக கொடுத்து சிரிக்க வைத்துள்ளனர் மீம் கிரியேட்டர்ஸ்.

    Recommended Video

    #PrayForSamuthirakani |Samuthirakani Memes | Lock Down

    இது போன்ற பல நிகழ்வுகளை மீம்களின் வாயிலாக கலாய்த்து தள்ளி வருகின்றனர் மீம் கிரியேட்டர்கள். இதே போல் விழிப்புணர்வோடு 'வெளியே சென்றால் கொரானா ஆபத்து உள்ளது', ' போலீஸின் தியாகம் 'என்று பல வகையான மீம்களும் சமூக வலைத்தளங்களை வலம்வந்து கொண்டு தான் இருக்கின்றன.

    English summary
    Memes are being made to laugh by Meme Creators
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X