அரசனா? அசுரனா?.. சிம்பு - வெற்றிமாறன் படத்தை வைத்து செய்யும் நெட்டிசன்கள்.. பறக்கும் மீம்ஸ்கள்

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படத்தின் பெயர் 'அரசன்' என்று வைக்கப்பட்டிருக்கிறது. இப்படமானது வடசென்னை யுனிவர்ஸில் உருவாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தின் பெயரை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்களை நெட்டிசன்கள் பகிர்ந்துவருகிறார்கள்.

வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்குவதாக இருந்தார். அதில் அவருடன் அமீர் உள்ளிட்டோர் எல்லாம் நடிப்பதாக இருந்தது. படத்தின் டெஸ்ட் ஷூட்டும் நடத்தப்பட்டது. கிராஃபிக்ஸ் பணிகள் எல்லாம் லண்டனில் நடந்துவந்தன. பெரிய எதிர்பார்ப்பை சந்தித்திருந்த இந்தப் படம்; மேற்கொண்டு அடுத்தக்கட்டத்துக்கு செல்லவில்லை. அதற்கு யூகங்களாக ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன.

சிம்புவுடன் கூட்டணி: கலைப்புலி தாணுவுக்கு படம் செய்வது என்பதில் வெற்றிமாறன் உறுதியாக இருந்தார். எனவே வாடிவாசல் படத்துக்காக இன்னொரு கதையை கையில் எடுத்தார். அதில் ஹீரோவாக சிம்பு கமிட்டாகியிருக்கிறார். தனது இரண்டாவது இன்னிங்ஸில் கதை தேர்விலும், இயக்குநர் தேர்விலும் ரொம்பவே கவனமாக இருக்கிறார் எஸ்டிஆர். அனுபவம், இளமை என இரண்டு தரப்பு இயக்குநர்களுடனும் வேலை செய்துவருகிறார்.

Memes circulating on the name of the film Arasan starring Simbu Vetrimaaran have gone viral
Photo Credit:

பெரிய சர்ப்ரைஸ்: வெற்றிமாறனுடன் சிம்பு இணையப்போகிறார் என்ற அறிவிப்பு வந்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. இத்தனை வருடங்கள் கழித்து இப்போதாவது இவர்கள் இணைகிறார்களே என கொண்டாடுகிறார்கள். படத்தின் ப்ரோமோ ஷூட்டும் முடிந்துவிட்டது. இதற்கிடையே வடசென்னை படத்திலேயே இக்கூட்டணி அமைந்திருக்க வேண்டுமென்பதும், சில காரணங்களால் அது நடக்கவில்லை என்பதும் நினைவுகூரத்தக்கது.

அனிருத் இசையா?: இப்படம் வடசென்னை 2 இல்லை என்பதையும், இது வடசென்னை யுனிவர்ஸில் வரும் என்பதையும் வெற்றி உறுதிப்படுத்தியிருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க இப்படம் பற்றி பெரிய கவலையாக ரசிகர்கள் பார்ப்பது, அனிருத் இசை என்று தகவல் வருவதுதான். ஜிவி பிரகாஷ் அல்லது சந்தோஷ் நாராயணனை வைத்தே இசையமைக்கலாம் என்று ஏகப்பட்ட பேர் கருத்துக்களை முன்வைத்துவருகிறார்கள்.

Memes circulating on the name of the film Arasan starring Simbu Vetrimaaran have gone viral
Photo Credit:

அரசனா? அசுரனா?: இந்நிலையில் படத்துக்கு 'அரசன்' என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் பெயருக்கு பெரிய ஹைப்பை ஏற்றி வைத்திருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் அரசன் எனும் பெயர் அவ்வளவு ஒன்றும் மாஸாக இல்லை என குறை கூற ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்கள். அதுமட்டுமின்றி தனுஷுக்கு அசுரன், சிம்புவுக்கு அரசன் எனவும், ' இது என்ன அரசன்' சோப்பா என்றும் மீம்ஸ்களை தயார் செய்து பறக்கவிட ஆரம்பித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தில் அனிருத் இசையமைப்பதாக வரும் தகவலை வைத்தும் அவரையும் கிண்டல் செய்துவருகிறார்கள். தற்போது அந்த மீம்ஸ்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிவருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X