twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஸ்வரூபம் எடுத்த மெர்சல் பிரச்சனையை யாரு, எப்போ ஆரம்பிச்சாங்க?: ஒரு பார்வை

    By Siva
    |

    Recommended Video

    விஸ்வரூபம் எடுத்த மெர்சல் பிரச்சனை ஆரம்பிச்சது எப்போ?-வீடியோ

    சென்னை: மெர்சல் பட வசனங்கள் எப்படி பிரச்சனையாகி விஸ்வரூபம் எடுத்தது என்று தெரிந்து கொள்க.

    அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்த மெர்சல் படம் புதன்கிழமை தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸானது. படம் ரிலீஸான மறுநாள் அதற்கு பிரச்சனை கிளம்பியது.

    அதன் விபரம் இதோ,

    பாஜக

    பாஜக

    விஜய் ஜிஎஸ்டி குறித்து வசனம் பேசியதற்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்தார். இதை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகினர்.

    கோரஸ்

    கோரஸ்

    தமிழிசை கண்டனம் தெரிவித்ததும் பாஜக தலைவர்கள் தங்கள் பங்கிற்கு மெர்சலுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஜிஎஸ்டி குறித்த வசனங்களை நீக்க வேண்டும் என்று வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

    ஜோசப் விஜய்

    ஜோசப் விஜய்

    பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஒருபடி மேலே சென்று விஜய்யை ஜோசப் விஜய் என்று கூறி மதத்தை இழுத்துவிட்டார்.

    திமுக, காங்கிரஸ்

    திமுக, காங்கிரஸ்

    மெர்சல் படத்தை பாஜக எதிர்த்ததை பார்த்த திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாமக உள்ளிட்ட கட்சிகள் மெர்சலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    தமிழ்

    தமிழ்

    மெர்சல் விவகாரம் தொடர்பாக ரசிகர்கள் பாஜகவை கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிக்கும்போது படத்திற்கு ஆதரவு தெரிவித்து அதுவும் தமிழில் ட்வீட்டினார் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி. இதை பார்த்த ரசிகர்களோ நன்றிஜி என்று ராகுலை வாழ்த்தினர்.

    மகன்

    மகன்

    ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு தோல்வி அடைந்துவிட்டது என்று பல பாஜக தலைவர்களே கூறியுள்ள நிலையில் என் மகனை எதற்காக குறி வைக்க வேண்டும் என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி கேள்வி எழுப்பினார்.

    நெட்

    நெட்

    விஜய்யை ஜோசப் விஜய் என்று கூறியதோடு மட்டும் அல்லாமல் மெர்சல் படத்தை நெட்டில் பார்த்ததாக தெரிவித்தார் ஹெச். ராஜா. அவரின் இந்த செயலுக்கு திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    தயாரிப்பாளர்

    தயாரிப்பாளர்

    சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க பாஜக 2 நாட்கள் கெடு விதித்தது. இதையடுத்து காட்சிகளை நீக்க சம்மதித்த தயாரிப்பாளர் பின்னர் எந்த காட்சியையும் நீக்க முடியாது என்று தைரியமாக கூறிவிட்டார்.

    நாங்களும் தான்

    நாங்களும் தான்

    ஹெச். ராஜா விஜய்யை ஜோசப் விஜய் என்று கூறியது திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து நானும் ஜோசப் தான் என்று கூறி ரசிகர்களும், திரையுலகினர் சிலரும் ட்வீட்டியுள்ளனர்.

    English summary
    Above is a timeline of Mersal controversy. It started the very next day of the movie's release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X