»   »  மெர்சலுக்கு தொடரும் தலைவலி!

மெர்சலுக்கு தொடரும் தலைவலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகுமா, வெளியாகாதா என பெட் கட்டும் அளவுக்கு அப்படத்துக்கு சிக்கல்கள் தொடர்கின்றன. தயாரிப்பாளர் ஏக டென்ஷனில் உள்ளார்.

கேளிக்கை வரி ரத்தாகும் வரையில் புதுப்படங்களை வெளியிடுவதில்லை என விஷால் ஒரு பக்கம் அறிவித்துள்ளார். தீபாவளிக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், இன்னும் அரசுடனான பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

Mersal faces one more trouble

இன்னொரு பக்கம் தியேட்டர்காரர்கள் நாங்கள் வரி செலுத்திவிடுகிறோம், ஆனால் இஷ்டப்படி கட்டணத்தை ஏற்றிக் கொள்கிறோம்.. பாத்துப் பண்ணுங்க என்று திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Mersal faces one more trouble

இந்த நிலையில் மெர்சல் படத்துக்கு இன்னும் விலங்குகள் நல வாரியத்திடமிருந்து ஆட்சேபணையில்லா கடிதம் கிடைக்கவில்லையாம். காரணம் படத்தில் விலங்குகள், பறவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே இந்த சான்று இல்லாமல் படத்தை வெளியிட முடியாத நிலை. கடைசி நேரத்தில் இந்த சான்றிதழ் பெற போராடிக் கொண்டிருக்கிறார்களாம்.

English summary
Due to delay in getting no objection letter from Animal Welfare Board of India, the release of Mersal is in trouble again

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil