»   »  டிவிட்டரில் டிரெண்டாகும் மெர்சல் #Mersal.. விஜய் ரசிகர்கள் உற்சாகம்

டிவிட்டரில் டிரெண்டாகும் மெர்சல் #Mersal.. விஜய் ரசிகர்கள் உற்சாகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடித்து வரும் 61வது படத்திற்கு மெர்சல் என பெயரிட்டுள்ளனர். தற்போது மெர்சல் #Mersal என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

தெறி படத்தை அடுத்து இயக்குனர் அட்லீ, விஜய் மீண்டும் இணைந்துள்ள படம் விஜய் 61. படத்தில் விஜய் அப்பா, 2 மகன்கள் என்று மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அப்பா விஜய்க்கு நித்யா மேனன் ஜோடியாக நடித்துள்ளார்.

#mersal hashtag trend on Twitter

விஜய் 61 படப்பிடிப்பு ஐரோப்பாவில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இதுவரை பெயரிடப்படாமல் நடைபெற்று வந்த படத்துக்கு மெர்சல் என இன்று பெயரிடப்பட்டுள்ளது.

3 கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் நடித்துள்ளார்கள். மேலும், சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சென்னை, ராஜஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

விஜய் படத்தின் தலைப்பு வெளியான சில நிமிடங்களிலே அவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். தற்போது மெர்சல் #Mersal என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாவதை முன்னிட்டு #Thalapathy61FLCountdown என்ற ஹேஷ்டேக் டிரெண்டில் இந்திய அளவில் முதலிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
twitter trend in vija's 61st film #Mersal title

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil