»   »  அண்ணன் விஜய்யுடன் மோதும் தம்பி விக்ராந்த்

அண்ணன் விஜய்யுடன் மோதும் தம்பி விக்ராந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளிக்கு அண்ணன் விஜய், தம்பி விக்ராந்த்தின் படங்கள் மோத உள்ளன.

இந்த தீபாவளி தளபதி தீபாவளி. அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள மெர்சல் படம் ரிலீஸாகிறது. ஆனால் மெர்சல் தனியாக ரிலீஸாகவில்லை.

அதனுடன் மேலும் இரண்டு படங்கள் ரிலீஸாகின்றன.

கவுதம் கார்த்திக்

கவுதம் கார்த்திக்

கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, சதீஷ், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள ஹர ஹர மகாதேவகி படம் தீபாவளி அன்று தான் ரிலீஸாகிறது. அவர்கள் துணிந்து மெர்சலுடன் மோதுவதற்கு காரணம் உள்ளது.

விக்ராந்த்

விக்ராந்த்

சுசீந்திரன் இயக்கத்தில் விக்ராந்த், சந்தீப் கிஷன், மெஹ்ரின் பிர்சாதா உள்ளிட்டோர் நடித்துள்ள நெஞ்சில் துணிவிருந்தால் படத்தையும் தீபாவளி அன்று தான் ரிலீஸ் செய்கிறார்கள்.

விஜய்-விக்ராந்த்

விஜய்-விக்ராந்த்

தீபாவளி அன்று அண்ணன் விஜய், தம்பி விக்ராந்த் ஆகியோரின் படங்கள் மோதுகின்றன. விக்ராந்த் நண்பர்கள் உதவியுடன் திரையுலகில் வளர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹர ஹர மகாதேவகி

ஹர ஹர மகாதேவகி

ஹர ஹர மகாதேவகி படத்தின் ட்ரெய்லரே தெறிக்கவிட்டார்கள். அடல்ட் காமெடி படம். ட்ரெய்லரை பார்த்த பலரும் முதல் நாளே படத்தை பார்த்துவிடும் ஆசையில் உள்ளார்கள்.

ஹிட்

ஹிட்

ஹர ஹர மகாதேவகி படம் நிச்சயம் ஹிட்டாகும் என்பது ரசிகர்களின் கணிப்பு. படம் செம்மயா இருக்கும் போலடா, முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் பலரிடம் உள்ளது.

English summary
Nenjil Thunivirunthal, Hara Hara Mahadevaki movies are also hitting the screens on Diwali along with Vijay starrer Mersal.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil