»   »  தீபாவளிக்கு மெர்சல், மேயாத மான் மட்டும் இப்போதைக்கு கன்ஃபர்ம்!

தீபாவளிக்கு மெர்சல், மேயாத மான் மட்டும் இப்போதைக்கு கன்ஃபர்ம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்னும் நான்கு நாட்களில் தீபாவளி. தீபாவளி கொண்டாட்டங்களில் புதிய படங்களைப் பார்ப்பதும் ஒன்று.

முன்பெல்லாம் நான்கைந்து படங்களாவது தீபாவளிக்கு வெளியாகும். ஆனால் இப்போது ஒன்றிரண்டு படங்கள் வெளியாவதே பெரிய விஷயமாகிவிட்டது.

Mersal, Meyatha Maan confirm for Diwali 2017

இந்த தீபாவளிக்கு மெர்சல் உள்ளிட்ட நான்கு படங்கள் வெளியாகும் வாய்ப்பு இருந்தது. புதிய கட்டணப் பிரச்சினை, தயாரிப்பாளர் சங்க கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வந்துள்ள நிலையில் தீபாவளிக்கு என்னென்ன படங்கள் வெளியாகவிருக்கின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வரும் அக்டோபர் 18-ம் தேதியன்று அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் வெளியாகியறது. உலகெங்கும் 3300 அரங்குகளில் படம் வெளியாகிறது.

மேயாத மான் என்ற படமும் தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இடம் பெற்றது. கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்.

சசிகுமார் - முத்தையா கூட்டணியில் உருவாகியுள்ள கொடி வீரன் தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

English summary
Only two movies, i.e, Mersal and Meyatha Maan are confirmed for Diwali 2017

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil