twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'மெர்சல்' தோல்விப்படம் என்றவர்களுக்கு தேனாண்டாள் பிலிம்ஸ் பதிலடி!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    என்ன ஆச்சு தேனாண்டாள் நிறுவனத்துக்கு?- வீடியோ

    சென்னை : கடந்த தீபாவளியன்று விஜய் நடிப்பில் வெளியான 'மெர்சல்' படம் எங்கள் நிறுவனத்திற்கு பெருமையான திரைப்படம் என அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிய 'மெர்சல்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது. இந்தப் படம் தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது.

    Mersal producer retaliates crictics


    இந்தப் படத்தின் ப்ரொமோஷன் பணிகளுக்காகவும் அதிகமாக செலவு செய்தது தேனாண்டாள் நிறுவனம். மெர்சல் எனும் பெயருக்கு டிரேட் மார்க் அங்கீகாரமும் பெற்றனர். படத்தின் ரிலீஸுக்கு பிறகு பா.ஜ.க-வினரின் எதிர்ப்பால் படம் நல்ல வசூல் அள்ளியது.

    ஆனால், விமர்சகர்கள் பலர் இயக்குநர் அட்லீ படத்தின் பட்ஜெட்டை தாண்டி அதிகமாக செலவு செய்ததால், இந்தப் படம் தயாரிப்பு நிறுவனத்துக்கு தோல்விப் படம் என கூறினர். இது திரையுலகினர் மத்தியில் விவாதத்தை உண்டாக்கியது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், மெர்சல் படம் எங்க்ளுக்கு பெருமை என்றும், தளபதி விஜய்யுடன் பணிபுரிந்தது மிகவும் பெருமையாக உள்ளது என்றும் பதிவிட்டுள்ளார்.

    English summary
    Many of the critics claim that the film mersal was a failure for the production company, because Atlee spent much of the film's budget. Sri thenandaal films retaliated to this.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X