சென்னை : அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, வடிவேலு ஆகியோர் நடிக்கும் திரைப்படம் 'மெர்சல்'. 'மெர்சல்' விஜய்யின் 61 -வது படம். கடந்த ஜூன் மாதம் வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
உற்சாகத்தில் ரசிகர்கள் :
கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி இப்படத்தின் 'ஆளப்போறான் தமிழன்' சிங்கிள் ட்ராக் வெளியிடப்பட்டது. நேற்று 'நீதானே... நீதானே...' எனும் இரண்டாவது சிங்கிள் ட்ராக் வெளியிடப்பட்டது. பாடலாசிரியர் விவேக் எழுதிய இந்தப் பாடலை, ஸ்ரேயா கோஷல், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பாடியிருக்கின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20-ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப் பிரம்மண்டமாக நடைபெற உள்ளது. 'மெர்சல்' படம் குறித்த அதிரடி அறிவிப்புகளால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.
— Vijay (@actorvijay) August 18, 2017 |
ட்விட்டர் கொடுத்த சர்ப்ரைஸ் :
ட்விட்டர் சமூக வலைதளம் இன்று 'மெர்சல்' படத்திற்கு புதிதாக எமோஜியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 'மெர்சல்' ஃபர்ஸ்ட் லுக்கில் இருக்கும் விஜய்யின் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் அந்த எமோஜி ட்விட்டர் தளத்தால் அதிகாரப்பூர்வமாக இன்று லைவ் செய்யப்பட்டிருக்கிறது. இந்த எமோஜியை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கபாலிக்குக் கிடைக்காத பெருமை :
ஏற்கெனவே, 'கபாலி' படத்திற்கு எமோஜி வெளியிட முயற்சிசெய்யப்பட்டது. ஆனால், அப்படத்திற்குக் கிடைக்கவில்லை. இதனையடுத்து, அஜித் நடிக்கும் 'விவேகம்' படத்திற்கோ விஜய் நடிக்கும் 'மெர்சல்' படத்திற்கோ எமோஜி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. அதனால் விஜய் - அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக்கொண்டனர்.
இந்நிலையில் ட்விட்டரில் தளம், விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் விதமாக 'மெர்சல்' எமோஜி வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முதல் எமோஜி எனும் பெருமையும் மெர்சலுக்குக் கிடைத்துள்ளது. 'எமோஜி வெளியிடப்பட்டது முதல் ரசிகர்கள் அந்த எமோஜியைக் குறிப்பிட்டு ட்வீட்டுகளைத் தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
முதல் இந்தியப் படம் :
பாலிவுட்டில் சல்மான் கான் நடித்த 'டியூப்லைட்' படத்திற்கு முதல் முறையாக ட்விட்டர் எமோஜி அறிமுகமானது. அதுவே இந்தியத் திரைப்படம் ஒன்றிற்கு அளிக்கப்பட்ட முதல் எமோஜி ஆகும். தென்னிந்தியாவில் இந்தப் பெருமையை தமிழ்ப்படம் ஒன்று கைப்பற்றி இருக்கிறது.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.
Related Articles
விஜய்யின் 'மெர்சல்' படத்துக்கு மேலும் ஒரு கௌரவம்.. ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பெருமிதம்!
விஜய்க்கு எதிராக பாலிடிக்ஸ் பண்ணும் வரலட்சுமி
விஜய்யின் இன்றைய நிலைமைக்குக் காரணம் இவர்தான் - டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் புகழாரம்!
விஜய், சூர்யா ரசிகர்கள் அப்டி ஓரமா நில்லுங்க... கெத்தாக சாதனை படைத்த கோஹ்லி - அனுஷ்கா!
தமிழ்த்தாய் வாழ்த்தின்போது விஜய் எழுந்து நிற்கவில்லையா?: தயாரிப்பாளர் விளக்கம்
அட்லீயின் அடுத்த படம் தெலுங்கு இல்லை தமிழ் தானாம்: அப்போ ஹீரோ அவரா?
காவிரி, ஸ்டெர்லைட்டுக்காக திரையுலகினர் மவுன போராட்டம்: முதல் ஆளாக வந்த விஜய்
விஜய்யின் 64வது படம்... டைரக்டர் யார் தெரியுமா? #Vijay64
அட்லீயின் அடுத்த படமும் விஜய்யுடன்தான்... ஆனால்!
விஜய்யின் பிளஸ் தான் அவருக்கு மைனஸும்: சொல்கிறார் கஸ்தூரி
கில்லி படத்தில் ஏன் தான் நடிச்சேனோ?: விஜய் தங்கச்சி புலம்பல்
ராதாரவியுடன் விஜய்.. விஷால் குரூப்புக்கு எதிர் நிலையா?
கார்த்திக் சுப்புராஜ், அட்லீ, அருண் பிரபு யாருக்கு அடிக்கப்போகுது யோகம்?