»   »  வேகத்தை விட விவேகம் பெருசு, விவேகத்தை விட அஜீத்தே பெருசு: பார்த்திபன்

வேகத்தை விட விவேகம் பெருசு, விவேகத்தை விட அஜீத்தே பெருசு: பார்த்திபன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மெர்சல் பேச்சுக்கு தன்னை பலரும் கலாய்த்ததை பார்த்த பார்த்திபன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் போட்டுள்ளார்.

மெர்சல் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் விஜய் தான் சிறந்த சி.எம். என்றார். மேலும் தனக்கே உரிய ஸ்டைலில் விஜய்யை புகழ்ந்தார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்க்கத் துவங்கினர். உடனே பார்த்திபன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.

ஏச்சு

காசுக்கு மாரடிக்காத
Mass-ஆன பேச்சுக்கு
மாசு நிறைந்த ஏச்சுக்கு ஆளானது
இதுவே முதன்முறை!
வாயார/மனதார வாழ்த்துவது
என் மேடை நாகரீகம்.
அவர் அழைத்தாலும்
தலை நிமிர இப்படி சொல்வேன்.
"வேகத்தை விட
விவேகம் பெருசு-ஆனா
விவேகத்தை விட
அஜீத்தே பெருசு!"-நான்
கலைஞர்கள் அனைவருக்கும் நண்பன்.ஆனால்
சினிமாவுக்கு மட்டுமே ரசிகன்.
'ஆளப்போறான்(?)சிறந்த(?)மனிதன்(?)
வாழப்போறான் விவசாயி'-அதுவே
நம்பிக்கை நிறைந்த என் பேச்சின்
மெரஸலான மெசேஜ்! என பார்த்திபன் போஸ்ட் போட்டுள்ளார்.

முதல்வர்

உங்க நலம் விரும்பி என்ற முறையில் சொல்கிறேன்..தயவு செஞ்சி புகழ்கிறேன்.. அங்கே இருப்பவரை மகிழ்ச்சி படுத்தறேன்னு.. என்ன வேணும்னாலும் சொல்லுங்க.. ஆனால் வரும்கால முதலமைச்சர் என்று மட்டும் சொல்லதேங்கா.. அது உங்களுக்கும் நல்லது இல்லை.. அந்த மேடையில் இருப்பவருக்கும் நல்லது இல்லை... நீங்க வருங்கால முதல்வர் என்று சொன்ன வரிசை மட்டும் மிக பெரியது.. என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

பார்த்தீப பாணி

'அழகிய தமிழ் மகன்' படத்திற்கு கூட நீங்கள் ஒரு கவிதை எழுதிக் கொடுத்ததாய் ஞாபகம் ! அதனால் நான் ஒன்றும் உங்கள் நேற்றைய பேச்சை விமர்சிக்க போவதில்லை ! ஆனால் நாங்கள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் பார்த்தீப பாணி இதுவல்ல !

கிறுக்கல்கள்

உங்ககிட்ட இருந்து கிறுக்கல்கள் தான் எதிர்பார்த்தோம் ...
இது உங்க ஸ்டைல் இல்ல அவ்வளவு தான் ...
படத்தை விளம்பரப்படுத்துவது தயாரிப்பாளர் வேலை ...

நீங்களுமா?

கூட்டத்தை பார்த்தால் ஒரு சிலர் கைதட்டல் வாங்குவதற்கு துதி பாடுவார்கள், அதில் நீங்களுமா....

English summary
Director cum actor Parthiban has posted an explanation in Facebook after people troll him for his speech at the Mersal audio launch.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil