»   »  நாளை மெர்சல் டீசர்... இன்று வெளியானது ஜல்லிக்கட்டு வீரன் விஜய்யின் அசத்தல் டிசைன்! #MersalTeaser

நாளை மெர்சல் டீசர்... இன்று வெளியானது ஜல்லிக்கட்டு வீரன் விஜய்யின் அசத்தல் டிசைன்! #MersalTeaser

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் முதல் டீசர் நாளை செப்டம்பர் 21-ம் தேதி இணைய தளத்தில் வெளியாகிறது. இதற்கான ஒரு டிசைனை தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட, குஷியான விஜய் ரசிகர்கள் அதை இன்று முழுக்க சமூக வலைத் தளங்களில் வைரலாக்கிவிட்டனர்.

இந்த டீசர் டிசைனில் விஜய் ஒரு ஜல்லிக்கட்டுக் காளையுடன் நிற்கிறார். அவருக்குப் பக்கத்தில் கைக் குழந்தையுடன் அமர்ந்திருக்கிறார் நடிகை நித்யா மேனன்.

Mersal teaser from Sep 21st

குடும்பப் பாங்கான, கிராமத்து அதிரடி ஆக்ஷன் படம் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்த டிசைன்.

இதுவரை வெளியான தனது எந்தப் படங்களிலும் இல்லாத அளவுக்கு கம்பீரமாகவும் அழகாகவும் இந்தப் பட டிசைன்களில் காட்சி தருகிறார் விஜய். இது அவரது ரசிகர்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது

நாளை படத்தின் முதல் டீசர் வெளியாகிறது. இப்போதெல்லாம் எந்தப் படத்தின் டீசர் பெரிய சாதனைப் படைக்கிறது என்பதில் பெரும் போட்டியே நடக்கிறது. சமீபத்தில் வெளியான விவேகம் டீசர் அதிக லைக்குகள் வாங்குவதில் சாதனைப் படைத்தது.

நாளை வெளியாகும விஜய்யின் மெர்சல் டீசர் என்ன சாதனைப் படைக்கிறது பார்க்கலாம்!

English summary
Vijay's Mersal Teaser will be released tomorrow.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil