»   »  'மெர்சல்' தெலுங்கு பாடல் ரிலீஸ்! - விஜய், சமந்தா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

'மெர்சல்' தெலுங்கு பாடல் ரிலீஸ்! - விஜய், சமந்தா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐதராபாத் : தமிழ் சினிமாவில் அடுத்த பெரும் எதிர்ப்பார்ப்பு 'மெர்சல்' படத்தின் மீது தான். அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு எனப் பலர் நடித்துள்ள இப்படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

இந்தப் படம் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. தெலுங்கில் வெளியாகும் மெர்சல் படத்துக்கு 'அதிரிண்டி' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

'மெர்சல்' படத்தைப் பற்றி புதிதுபுதிதாக அப்டேட்ஸ் வந்தவண்ணம் இருக்கின்றன. 'மெர்சல்' படம் மீதான இடைக்காலத் தடை நீக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்திருக்கிறது.

 அதிரண்டி

அதிரண்டி

இந்நிலையில், 'மெர்சல்' தெலுங்கு படமான 'அதிரிண்டி'யில் இடம்பெற்றிருக்கும் 'நீவேலே... நீவேலே...' பாடல் சற்றுமுன்பு வெளியாகி இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான 'மெர்சல்' பாடல்கள் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

டூயட் சாங்

இப்படத்தின் 'நீவேலே... நீவேலே...' பாடலை ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியிருக்கிறார்கள். விஜய், சமந்தா இருவரும் டூயட் பாடும் இந்தப் பாடல் ரொமான்டிக் பாடலை விரும்பும் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்.

 சமந்தா திருமணம்

சமந்தா திருமணம்

சமந்தா நாகசைதன்யாவின் திருமணம் இன்று இந்து முறைப்படியும், நாளை கிறிஸ்தவ முறைப்படியும் கோவாவில் நடைபெறுகிறது. இருவரின் திருமணம் தமிழ், தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்படும் நிலையில் சமந்தா ஸ்பெஷலாக இன்று வெளியாகியிருக்கிறது டூயட் சாங்.

 ட்ரெண்டிங்

ட்ரெண்டிங்

'அதிரண்டி' பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியானதும், ட்விட்டரில் மீண்டும் #Mersal #Adhirandi ஆகியவை ட்ரெண்டிங்கில் இடம் பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. தெலுங்கு நட்சத்திரக் குடும்பத்தின் திருமணம் அன்று சமந்தா நடித்த டூயட் சாங் வெளியாகி தெலுங்கு ரசிகர்களை குஷியாக்கி இருக்கிறது.

English summary
'Mersal' telugu version 'Adhirindi' duet song 'neeveyeley neeveyley...' is out now offficially. Adhirindi songs are composed by A.R.Rahman.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil