»   »  மெர்சல் டைட்டில் பஞ்சாயத்து? எக்ஸ்க்ளுசிவ்!

மெர்சல் டைட்டில் பஞ்சாயத்து? எக்ஸ்க்ளுசிவ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் படங்களுக்கு ரிலீஸ் சமயத்தில் ஏதாவது பஞ்சாயத்து வந்து எட்டி பார்ப்பது வாடிக்கைறு. துப்பாக்கி படம் ரிலீஸாகும் சமயத்தில் கள்ளத் துப்பாக்கி என்று ஒரு படத்தை எடுத்து வைத்துக்கொண்டு பிரச்னை செய்தார்கள். இப்போது மெர்சலும் அப்படி ஒரு பிரச்னையில் சிக்கவிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மெர்சல் என்று விஜய் படத்துக்கு பெயரிடுவதற்கு முன்பே 'மெர்சலாயிட்டேன்' என்று ஒரு தலைப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் பதியப்பட்டு ஷூட்டிங் போய்க்கொண்....டே இருந்திருக்கிறது. மெர்சல் டைட்டில் அறிவிக்கப்பட்டதில் இருந்து ஆடியோ வெளியீடு கூட முடிந்துவிட்டது. இன்னும் அவர்கள் தரப்பில் மௌனம் காக்கிறார்கள். ரிலீஸ் சமயத்தில் கிளம்புவதற்காக காத்திருக்கிறார்களாம்.

Mersal title in trouble

இதனால்தான் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மெர்சல் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை என்றும் சொல்கிறார்கள்.

English summary
Sources say that Mersal title is caught in trouble, because some one has titled his movie in similar title.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil