»   »  'ஏ' சான்றிதழ் கொடுத்தால் அந்த மாதிரிப் படமா?.. கொந்தளிக்கும் 'மெட்ரோ' இயக்குநர்!

'ஏ' சான்றிதழ் கொடுத்தால் அந்த மாதிரிப் படமா?.. கொந்தளிக்கும் 'மெட்ரோ' இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தணிக்கையில் ஏ சான்றிதழ் பெறும் படங்கள் குறித்து தணிக்கைக் குழுவினர் விளக்க வேண்டும் என, மெட்ரோ இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

பாபி சிம்ஹா, சிரிஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் மெட்ரோ 'ஏ' சான்றிதழுடன் வருகின்ற 24 ம் தேதி வெளியாகிறது.


இந்நிலையில் தணிக்கையில் மெட்ரோ படம் பட்ட பாட்டை சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் விளக்கியிருக்கிறார்.


மெட்ரோ

மெட்ரோ

''மெட்ரோ நகரங்களில் நடக்கும் செயின் பறிப்பு, கொள்ளை சம்பவங்களை அடிப்படையாகக்கொண்ட படமென்பதால் இப்படத்துக்கு மெட்ரோ என்று பெயர் வைத்தோம். இப்படி ஒரு தலைப்பு வைக்கும்போதே இதற்கு தணிக்கையில் யூ சான்றிதழ் கிடைக்காது என்று தெரியும். ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்க மறுப்பார்கள் என்பது நாங்கள் எதிர்பாராத ஒன்று.


மறுதணிக்கை

மறுதணிக்கை

மறுதணிக்கையில் இப்படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்தார்கள். நான் யூ/ஏ சான்றிதழ் கேட்டபோது படத்தின் நிறையக் காட்சிகளை வெட்ட வேண்டி வரும் என்று கூறினார்கள். நான் இதுவே போதும் என்று வந்துவிட்டேன்.ஏனெனில் இப்படத்தின் மறு தணிக்கைக்காக நான் 50 நாட்கள் காத்திருந்தேன். அந்த 50 நாட்களும் நான் எப்படி இருந்தேன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும்.


அந்த மாதிரி

அந்த மாதிரி

தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றால் அந்த மாதிரிப் படமென்றுதான் நினைத்துக் கொள்கிறார்கள். வன்முறை நிறைந்த படத்துக்கும் தணிக்கையில் 'ஏ' சான்றிதழ் கிடைக்கும் என்பதை தணிக்கைக் குழு விளக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
சென்சார்

சென்சார்

சமீபகாலமாக தணிக்கைக் குழு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இதற்கு சாட்சியாக உத்தா பஞ்சாப்(இந்தி), மெட்ரோ என்று சொல்லிக் கொண்டே போகலாம். உத்தா பஞ்சாப் விவகாரத்தில் பழைய கால பாட்டி மாதிரி இல்லாமல், காலத்துக்கு ஏற்றவாறு தணிக்கைக்குழு செயல்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.


English summary
Bobby Simha Starrer Metro Movie Press Meet Recently held in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil