»   »  சென்சார் போர்டு தலைவரைக் கலாய்த்த 'மெட்ரோ' இயக்குநர்!

சென்சார் போர்டு தலைவரைக் கலாய்த்த 'மெட்ரோ' இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தணிக்கை வாரியத்தின் தலைவராக இருந்த நிஹலானி அந்தப் பதவியில் இருந்து விலகிய பிறகு வினியோகஸ்தராகி தற்போது ராய் லக்‌ஷ்மி நடித்துள்ள ஜூலி 2 என்ற படத்தை வாங்கி வெளியிடுகிறார்.

இந்தப் படம் மிகவும் ஆபாசமாக இருப்பதாக ஏற்கனவே பலதரப்பட்ட விமர்சனங்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது . வெளிவருவதற்கு முன்பே பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய படம் 'மெட்ரோ'. படத்திற்கு தணிக்கைத் துறை தடை விதித்த பிறகு போராடித் தான் சான்றிதழ் பெற்றனர்.

Metro director's question to sensor board leader

செயின் திருட்டில் ஈடுபடும் இளைஞர்கள் பற்றிய இந்தப் படத்திற்கு வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பதாகக் கூறப்பட்டு டிவியில் ஒளிபரப்ப இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.

இது தொடர்பாக, ஜூலி 2 படத்தின் ட்ரெய்லர் வெளிவந்த நிலையில் 'மெட்ரோ' படத்தின் இயக்குநர் அனந்தகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பதிவில் நையாண்டியாகவும், கோபமாகவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

'ஜுலி 2' போன்ற ஒரு குடும்பப் படத்தை வெளியிடும் நபர் என் படத்தின் தொலைக்காட்சி உரிமைச் சான்றிதழ் தொடர்பாக பல முறை இ-மெயிலில் தொடர்புகொண்டும் எனக்கு எந்த பதிலும் தரவில்லை' என அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

English summary
Nihalani, the former chairman of the censor board, is now the distributor of the film 'Julie 2'. Metro director Ananda krishnan questioned Nihalani about his film's TV rights certificate.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil