மெட்டி ஒலி சீரியல் நடிகை உமா மகேஸ்வரி திடீர் மரணம்
சென்னை : சன் டிவி.,யில் மிகவும் புகழ்பெற்ற சீரியல் மெட்டி ஒலி. டைரக்டர் திருமுருகன் இயக்கிய இந்த சீரியல் முழுக்க முழுக்க குடும்ப சீரியலாக இயக்கப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றது.

பல சாதனைகளை படைத்த இந்த சீரியல் லாக்டவுன் சமயத்தில் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியலுக்கு அதிக ரசிகர்களும், நல்ல வரவேற்பும் இருப்பதால் இப்போதும் தொடர்ந்து இந்த சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
மெட்டி ஒலி சீரியலில் மூன்றாவது சகோதரியாக விஜி என்ற விஜயலட்சுமி கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகை உமா மகேஸ்வரி. இவர் இந்த சீரியலில் ஹீரோ கோபி கேரக்டரில் நடித்த திருமுருகனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் ஒரு கதையின் கதை, மஞ்சள் மகிமை உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் ஈ பார்கவி நிலையம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
தமிழில் வெற்றி கொடிகட்டு படத்தில் முரளியின் தங்கையாக நடித்திருப்பார். தொடர்ந்து அல்லி அர்ஜுனா, உன்னை நினைத்து போன்ற படங்களிலும் நடித்தார். விஜய் டிவியிலும் சில சீரியல்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு சீரியல்களில் நடிக்காமல் இருந்த உமா, விஜய் டிவி.,யில் கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மெட்டி ஒலி சீரியலில் லீலா கேரக்டரில் நடித்த வனஜா, உமா மகேஸ்வரியின் உடன் பிறந்த சகோதரி ஆவார். திருமணத்திற்கு பிறகு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால், சொந்தமாக பிசினஸ் செய்து வந்தார்.
அதோடு மீண்டும் சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார். சென்னை காட்டுக்குப்பம் பகுதியில் வசித்து வந்த உமா மகேஸ்வரி கடந்த சில நாட்களாக சிகிச்சையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் உமா மகேஸ்வரி இன்று காலை திடீரென உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 40.
உமா மகேஸ்வரியின் திடீர் மரணம் சின்னத்திரை பிரபலங்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











