»   »  ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் 'மேயாத மான்' படத்தின் பாடல்கள் இதோ!

ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் 'மேயாத மான்' படத்தின் பாடல்கள் இதோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி' ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் தயாரிப்பில் உருவான படம் 'மேயாத மான்'.

படத்தின் ஹீரோவாக வைபவ், ஹீரோயினாக சின்னத்திரை புகழ் ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ரத்னகுமார் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் 3 பாடல்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டன. படத்தில் மொத்தமாக இருக்கும் 7 பாடல்களும் நேற்று வெளியிடப்பட்டன.

இசை :

இசை :

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது நண்பரும் பாடகருமான பிரதீப் குமார் ஆகிய இருவரும் இணைந்து இசை அமைத்துள்ளனர்.

பின்னணி :

பின்னணி :

வைபவ், ப்ரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா உள்ளிட்ட பலர் நடிக்க, ரத்னகுமார் இயக்கியுள்ள இந்தப் படம் சென்னை பின்னணியில் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ளது.

இசை வெளியீடு :

லயோலா கல்லூரி மாணவர்களின் 'Ovations' நிகழ்ச்சிக்கு இடையே 'மேயாத மான்' படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. படக்குழுவினர் இந்த விழாவில் பங்குபெற்றனர்.

லயோலா காய்ஸ் :

லயோலா காய்ஸ் :

சுசீந்திரன், விஷால் சம்பந்தப்பட்ட படங்களின் இசை வெளியீட்டு விழா பெரும்பாலும் லயோலா கல்லூரியில் நடைபெறுவது வழக்கம். லயோலாவின் முன்னாள் மாணவர் என்பதால் இப்படிச் செய்வார் விஷால். இந்த வரிசையில் இப்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் இணைந்து விட்டார்.

English summary
Karthik Subbaraj and Karthikeyan Santhanam are producing the film 'Meyadha Maan'. Vaibhav, Priya Bhavani Shankar are playing lead roles. This movie's songs were released at Loyola College yesterday. Santhosh Narayanan and singer Pradeep Kumar have composed music for this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil