twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புத்தம் புதிய காப்பியாக வரும் எம்ஜிஆர் படங்கள்.. சென்னையில் 4 படங்கள் வெளியாகின்றன!

    By Shankar
    |

    என்னதான் பழைய படங்களாக இருந்தாலும், அவற்றை ஆயிரம் முறை தொலைக்காட்சி, டிவிடிகளில் பார்த்திருந்தாலும், திரையரங்குகளுக்குப் போய்ப் பார்ப்பதில் உள்ள சுகமே அலாதிதான்.

    அதிலும் மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவர் படங்களும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காதவை.

    100 நாள் கண்ட கர்ணன்

    100 நாள் கண்ட கர்ணன்

    சமீபத்தில் சிவாஜி கணேசனின் கர்ணன் படம் வெளியாகி 100 நாட்கள் ஓடி, கோடிகளில் வசூலைக் குவித்தது.

    கோலாகலமான குடியிருந்த கோயில்

    கோலாகலமான குடியிருந்த கோயில்

    அடுத்து, எம்ஜிஆரின் குடியிருந்த கோயில், நினைத்ததை முடிப்பவன், விவசாயி போன்ற படங்கள் வெளியாகின. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திருவிழா மாதிரி கொண்டாட்டத்துடன் படம் பார்த்து மகிழ்ந்தனர்.

    வசந்த மாளிகை

    வசந்த மாளிகை

    இப்போது சிவாஜி நடித்த வசந்த மாளிகை படம் கிட்டத்தட்ட 100 அரங்குகளில் வெளியாகியது. பெருமளவு ரசிகர்கள் ரசித்துப் பார்த்து மகிழ்ந்தனர். பெரிய படங்கள் எதுவும் இல்லாத நிலையில் அந்த இடைவெளியை நிரப்ப இந்தப் படங்கள் உதவின.

    எம்ஜிஆரின் 4 படங்கள்

    எம்ஜிஆரின் 4 படங்கள்

    இப்போது எம்.ஜி.ஆர் படங்களின் முறை. சென்னை தியேட்டர்களில் மட்டும் எம்ஜிஆரின் 4 படங்கள் ஓடிக்கொண்டுள்ளன. நான்குமே பல முறை வெளியாகி வசூல் சரித்திரம் படைத்தவை.

    நினைத்ததை முடிப்பவன்

    நினைத்ததை முடிப்பவன்

    மகாலட்சுமி தியேட்டரில் ‘நினைத்ததை முடிப்பவன்' படம் மீண்டும் வெளியாகியுள்ளது. போன வாரம் வெளியான இந்தப் படம் ஒரு வாரத்தை தாண்டி ஓடிக்கொண்டுள்ளது. இப்போதும் நல்ல கூட்டம் படத்துக்கு.

    பிராட்வேயில் வேட்டைக்காரன்

    பிராட்வேயில் வேட்டைக்காரன்

    சென்னையின் பழைய அரங்குகளில் ஒன்றான பிராட்வேயில் ‘வேட்டைக்காரன்' படம் வெளியாகியுள்ளது. பாடி சிவசக்தியில் ‘ரகசிய போலீஸ் 115' படமும், ஓட்டேரி பாலாஜி தியேட்டரில் ‘விக்கிரமாதித்தன்' படமும் திரையிடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் ‘சக்கரவர்த்தி திருமகள்' படம் வருகிறது.

    புதுப்படங்கள் காலி... பழைய படங்கள் ஜாலி

    புதுப்படங்கள் காலி... பழைய படங்கள் ஜாலி

    சமீபத்தில் வெளியான பல புது படங்கள் ஓரிரு நாட்களிலேயே கூட்டம் இல்லாமல் தியேட்டர்களிலிருந்து தூக்கப்படுகின்றன. ஆனால் எம்.ஜி.ஆர். படங்களை திரையிடும் தியேட்டர்களில் அந்தப் படங்கள் வாரக்கணக்கில் ஓடி லாபத்தைக் கொட்டுகின்றன. எம்.ஜி.ஆர். படம் ஒவ்வொன்றும் ரிலீசாகும் போதெல்லாம் ரசிகர்கள் தியேட்டர்களில் எம்.ஜி.ஆர். கட் அவுட்கள், கொடி தோரணங்கள் அமைத்து விழாவாக கொண்டாடுகிறார்கள்.

    எளிமை இனிமை

    எளிமை இனிமை

    கத்தி, ரத்தம், வன்முறையில்லாத, அருமையான வசனங்களுடன் எளிமையான காட்சி அமைப்புகளும், இனிய பாடல்களும் மக்களை வெகுவாக லயிக்க வைக்கின்றன. பழைய படங்களைப் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது மனசு புத்துணர்ச்சி பெறுவதாக ரசிகர்கள் வாய்விட்டு கமெண்ட் அடிப்பதைப் பார்க்க முடிகிறது.

    80 எம்ஜிஆர் படங்கள்

    80 எம்ஜிஆர் படங்கள்

    சென்னை, புதுவை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் மட்டும் ஆண்டுக்கு எம்ஜிஆரின் 80 படங்கள் மீண்டும் மீண்டும் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கின்றன என்கிறார்கள் பாக்ஸ் ஆபீசில். எம்ஜிஆர் மொத்தம் நடித்ததே 132 படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Legendary actor MGR's 4 movies are running successfully in Chennai city.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X