»   »  எம்.ஜி.ஆரின் பேரன் அறிமுகமாகும் கபாலி தோட்டம்!

எம்.ஜி.ஆரின் பேரன் அறிமுகமாகும் கபாலி தோட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலி தோட்டம் என்ற படத்தில் எம்ஜிஆரின் பேரன் ராமச்சந்திரன் நாயகனாக அறிமுகமாகிறார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசாமி பிக்சர்ஸ் மற்றும் ட்ரான்ஸ் லிங்க் மீடியா டிகே ராஜேந்திரன் இணைந்து தயாரிக்கும் படம்-கபாலி தோட்டம்.

MGR's grandson in Kabali Thottam

இந்தப்படத்தில் கதையின் நாயகர்களாக புதுமுகம் விக்கி மற்றும் எம் .ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் இருவரும் நடிக்கிறார்கள். எம்ஜிஆரின் வளர்ப்பு மகள்களுள் ஒருவரான சுதாவின் மகன்தான் ராமச்சந்திரன்.

நாயகியாக புதுமுகம் அனிஷா நடிக்கும் இந்தப் படத்தில் கோலிசோடா வில்லன் மது முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கே,ராஜன், ரோபோ சங்கர், தில்லி ஆர்.முகுந்தன், தாஸ் பாண்டியன், சுமலதா, ராதா, அருண்பாண்டியன், தஞ்சை தமிழ் பித்தன், பா.கி, இளமாறன், நெல்லை சிவா, சிசர் மனோகர், முத்துக்காளை ஆகியோரும் உடன் நடிக்கிறார்கள்

MGR's grandson in Kabali Thottam

இந்தப்படத்திற்கான தொடக்கவிழா நேற்று ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடந்தது. இயக்குநர் பேரரசு, இயக்குநர்கள் சமுத்திரக்கனி, கார்த்திக் சுப்பராஜ், நடிகர் சவுந்தர்ராஜா, தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

டிஆர் பாஸ்கர் எழுதி இயக்கம் இந்தப் படத்திற்கு யு.கே.முரளி இசையமைக்க பிரியன் பாடல்களை எழுதுகிறார்.

MGR's grandson in Kabali Thottam

படத்தைப் பற்றி இயக்குநர் பாஸ்கர் கூறுகையில், "தீயதைத் தீயிட வருவான் என்பதுதான் படத்தின் ஒன்லைன். சென்னையில் நடந்த உண்மைக் கதையை வைத்து எடுக்கவிருக்கிற கமர்ஷியல் படம்தான் இது," என்கிறார்.

English summary
MGR's grandson Ramachandiran is making his debut as hero in a movie titled Kabali Thottam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil