»   »  45 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப் பொலிவுடன் எம்.ஜி.ஆரின் ரிக்ஷாக்காரன்!

45 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப் பொலிவுடன் எம்.ஜி.ஆரின் ரிக்ஷாக்காரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படமான ரிக்ஷாக்காரன் புதிய பொலிவுடன் மீண்டும் வெளியாகிறது.

எம்ஜிஆர் - மஞ்சுளா, பத்மினி, அசோகன், மேஜர் சுந்தரராஜன் உள்ளிட்டோர் நடித்த ரிக்ஷாக்காரன் படத்தை சத்யா மூவீஸ் தயாரித்தது. 1971, மே 29-ம் தேதி வெளியான இந்தப் படம் வசூலில் புதிய சாதனை நிகழ்த்தியது.

எம்ஜிஆருக்கு தேசிய விருது

எம்ஜிஆருக்கு தேசிய விருது

இந்தப் படம்தான் எம்ஜிஆருக்கு தேசிய விருதினைப் பெற்றுத் தந்தது. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமைத்த இந்த படத்தை எம் கிருஷ்ணன் இயக்கியிருந்தார். அழகிய தமிழ் மகள் இவள்..., அங்கே சிரிப்பவர்கள், கொல்லிமலைக் காட்டுக்குள்ளே, கடலோரம் வாங்கிய காற்று, பொன்னழகுப் பெண்மை... என மிக இனிய பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

பல முறை

பல முறை

இந்தப் படம் பல முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்டது. பல ஊர்களில் திரும்பத் திரும்ப புதிய பிரிண்டாக வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது. எப்போது வெளியிட்டாலும் வசூலைக் குவித்த படம் இது.

டிஜிட்டலில்

டிஜிட்டலில்

இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படத்தை முழுமையாகப் புதுப்பித்து வெளியிடும் வேலையில் இறங்கியுள்ளனர். ஏற்கெனவே எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் புதிய வடிவில் வெளியாகி வெள்ளிவிழாக் கண்டது.

ட்ரைலர்

ட்ரைலர்

அதே பாணியில் இப்போது ரிக்ஷாக்காரனை வெளியிடும் பணிகள் நடக்கின்றன. விரைவில் படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது.

Read more about: mgr, எம்ஜிஆர்
English summary
The digital version of MGR's blockbuster movie Rikshawkaran will be released soon.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil