twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏட்டிக்கு போட்டி...எம்ஜிஆர், சிவாஜி படத் தலைப்புகள்...ஒரு சுவாரஸ்ய பார்வை

    |

    சென்னை: எம்ஜிஆர் காலத்தில் தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தினர் அவரை வைத்து தா வரிசை படங்கள் எடுக்க, சிவாஜியை வைத்து பீம்சிங் பா வரிசை படங்களை எடுத்தது அந்த காலத்தில் பெரிதாகப் பேசப்பட்டது.

    தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னர்களாக எம்ஜிஆரும், சிவாஜியும் நாடகத்துறையிலிருந்து சினிமாவில் வந்து அங்கும் ஆதிக்கம் செலுத்தினர்.

    இவர்கள் இருவர் காலத்தில் படங்களுக்கு வைக்கப்பட்ட தலைப்புகளுக்கே பெருத்த எதிர்ப்பார்ப்பு இருக்கும். சுவாரஸ்யமான அந்த நிகழ்வு குறித்து பார்ப்போம்.

    என்னது தனுஷ் இப்படிப்பட்டவரா? ....தந்தை கஸ்தூரி ராஜா சொன்ன வியப்பான தகவல்என்னது தனுஷ் இப்படிப்பட்டவரா? ....தந்தை கஸ்தூரி ராஜா சொன்ன வியப்பான தகவல்

    சினிமாவை நோக்கி நாடக கலைஞர்கள்

    சினிமாவை நோக்கி நாடக கலைஞர்கள்

    நாடகக்கலையின் ஆதிக்கம் முடிவடைந்து திரைப்படம் கோலோச்ச தொடங்கிய காலத்தில் நாடகத்துறையில் இருந்து சினிமாவிற்கு பலர் வந்தனர். அதில் முதன்மையானவர்கள் தியாகராஜ பாகவதரும், பி.யூ.சின்னப்பா, கே.ராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், டி.ஆர்.ராஜகுமாரி போன்றோர் திரைத்துறையிலும் ஆதிக்கம் செலுத்தினர்.

    நாடகத்துறை பிரபலங்கள் எம்ஜிஆர், சிவாஜி

    நாடகத்துறை பிரபலங்கள் எம்ஜிஆர், சிவாஜி

    நாடக்கத்துறையின் மூலம் பிரபலமாகி பின் திரைக்கு வந்த இருபெரும் நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜிகணேசன் ஆகியோர் ஆவர். அவர்களைப் பின்பற்றி எஸ்எஸ்ஆர் உள்ளிட்ட பல பிரபலங்கள் திரைக்கு வந்தனர். எம்.ஆர்.ராதா, டி.கே.சி, சகஸ்ரநாமம் உள்ளிட்டோரும் இதில் அடங்குவர். இதில் எம்ஜிஆர் தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னராக விளங்கினார் அவருக்கு அடுத்த இடத்தில் சிவாஜி கணேசன் இருந்தார்.

    30 ஆண்டுகள் உச்சத்தில் இருந்த எம்ஜிஆர்

    30 ஆண்டுகள் உச்சத்தில் இருந்த எம்ஜிஆர்

    எம்ஜிஆர், சிவாஜி இருவரும் பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில் ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர், ஜெய்சங்கர், முத்துராமன் என பல நடிகர்கள் இருந்தனர். எம்ஜிஆர் தான் ஆட்சிப் பொறுப்பேற்கும் வரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் முக்கிய உச்ச நடிகராக இருந்தார்.

    வீரத்துக்கு எம்ஜிஆர், நடிப்புக்கு சிவாஜி..

    வீரத்துக்கு எம்ஜிஆர், நடிப்புக்கு சிவாஜி..

    எம்ஜிஆர் சிவாஜியும் இருவேறு வகைகளில் நடித்தனர். எம்ஜிஆர் வீரம் கலந்த நடிப்புகளில் பாசிட்டிவான கேரக்டரில் நடித்தார். சிவாஜி கணேசன் குடும்பபாங்கான, இன்னல்களை அனுபவிக்கும் கதாபாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பாத்திரங்களில் நடித்து கலக்கினார். இவர்கள் இருவரும் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இவர்கள் நடித்த படங்களின் தலைப்புகள் பெரிதும் கவர்ந்தன.

    போட்டி போட்ட எம்ஜிஆர், சிவாஜி படங்கள்

    போட்டி போட்ட எம்ஜிஆர், சிவாஜி படங்கள்

    தாயை முக்கியமாக வைத்து தாய்க்கு பின் தாரம், தாயைக் காத்த தனயன், தலைவன், தர்மம் தலைகாக்கும் போன்று எம்ஜிஆர் படங்கள் 'த' வரிசையில் எடுக்கப்பட, பாசமலர், பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பார்த்தால் பசி தீரும் என 'ப' வரிசை படங்களாக சிவாஜி கணேசன் நடித்தார். இப்படி 'த', 'பா' வரிசை வரிசை படங்கள் மோதிக் கொண்டாலும் வேறு சில படங்களின் தலைப்புகளும் சிவாஜி, எம்ஜிஆர் போட்டியை வெளிப்படுத்தியது.

    தேசிய விருது கிடைக்காத சிவாஜி...

    தேசிய விருது கிடைக்காத சிவாஜி...

    சிவாஜி கணேசன் மிக சிறப்பாக நடித்து சிறப்பாக ஓடும் என்று எதிர்பார்க்கப்பட்ட படங்கள் ஓடாமல் போனதும், எம்ஜிஆர் சாதாரணமாக நடித்த படங்கள் வெள்ளிவிழா படங்களாக மாறியதும் தமிழ் திரையுலகின் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சி. சிறந்த நடிகர், நடிப்பிற்கு இலக்கணம் உலக அளவில் பெரிய நடிகர் என பேசப்பட்ட சிவாஜிகணேசனுக்கு இந்திய அளவிலான சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கவே இல்லை என்பது சுவாரஸ்யமான ஒரு வரலாறு. அதேநேரம் ரிக்‌ஷாக்காரன் படத்தில் நடித்த எம்ஜிஆருக்கு அது கமர்சியல் படமாக இருந்தாலும் சிறந்த நடிகர் விருது கிடைத்தது அதைவிட ஒரு சுவாரஸ்ய நிகழ்வு எனலாம்.

    'த' வரிசை 'ப' வரிசை படங்கள்

    'த' வரிசை 'ப' வரிசை படங்கள்

    எம்ஜிஆரின் வீரம், சிவாஜியின் நடிப்பை தமிழக மக்கள் இணைத்தே ரசித்தார்கள். அதேநேரம் மற்றவர்களின் படங்களும் வெளிவந்து ஓடின. பாலசந்தர், ஸ்ரீதர், கே.எஸ்.கோபால கிருஷ்ணன் போன்றோர் படங்களும் நன்றாக ஓடின. ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், ஜெமினி உள்ளிட்ட ஹீரோக்கள் நடித்த படங்களும் ஓடின. ஹீரோயின் சப்ஜக்ட் படங்களும் ஓடின. நாம் சொல்லவருவது எம்ஜிஆரின் 'த' வரிசை படங்கள், சிவாஜியின் 'ப' வரிசை படங்களைத் தாண்டி சில படங்களின் தலைப்புகள் இருவரிடையே இருந்த போட்டியை வெளிப்படுத்தும் விதமாக சுவாரசியமாக இருப்பதாக பேச்சு எழுந்தது.

    தலைப்புகளில் நகைச்சுவை...

    தலைப்புகளில் நகைச்சுவை...

    இந்த படங்கள் வெவ்வேறு காலகட்டத்தில் வந்தாலும் இந்த படங்களின் தலைப்புகளை வைத்து ஒருவருக்கு ஒருவர் பதில் சொல்வதுபோல் அமைந்துள்ளதாக ரசிகர்கள், நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த தலைப்புகளை பார்க்கும்போது நகைச்சுவை பார்வையில் இந்த தலைப்புகளை பார்த்தால் நிச்சயம் அனைவரும் ரசிப்பர். அப்படிப்பட்ட தலைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

    என்னடா இது பெரிய பஞ்சாயத்தாக இருக்கும்போல...

    என்னடா இது பெரிய பஞ்சாயத்தாக இருக்கும்போல...

    சில படங்களின் தலைப்புகள் ஏட்டிக்கு போட்டி, அல்லது பதில் சொல்வது போல் இருப்பதை காமெடியாக பதிவிட்டுள்ளனர். அரசக்கட்டளை- ஆண்டவன் கட்டளை, ஒளிவிளக்கு-பச்சைவிளக்கு, காவல்காரன்- காவல் தெய்வம், எங்கள் தங்கம்-எங்கள் தங்கராஜா, மன்னாதி மன்னன் - மன்னவன் வந்தானடி, பாசம்-பந்தபாசம், சக்ரவர்த்தி திருமகன் - மிருதங்க சக்ரவர்த்தி.

    ஏட்டிக்குப்போட்டி...

    ஏட்டிக்குப்போட்டி...

    பணம் படைத்தவன் -பணம், அன்பே வா- அன்பே ஆருயிரே, தெய்வத்தாய்- தெய்வ மகன், திருடாதே-திருடன், புதியபூமி-புதிய வானம், மருதநாட்டு இளவரசி-மருதநாட்டு வீரன், என் அண்ணன் - என் தம்பி, தாய்க்குப்பின் தாரம் - தாய்க்கு ஒரு தாலாட்டு, மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன் - ராஜராஜ சோழன், பட்டிக்காட்டு பொன்னைய்யா-பட்டிக்காடா பட்டணமா, குடியிருந்த கோயில்- அண்ணன் ஒரு கோயில், சபாஷ் மாப்பிள்ளை-சபாஷ் மீனா, என் தங்கை-தங்கை

    இதுபோன்ற தலைப்புகள் போட்டா-போட்டிகள் ஆரோக்கியமாக அந்த காலத்தில் இருந்தது. தலைப்புகள் வைக்க நடந்த போட்டிகளை ரசிகர்களும் வெகுவாக ரசிக்கத்தான் செய்தனர். அருகிப்போன நல்ல தலைப்புகளை அசைபோட்டப்படி தற்போது வரும் படங்களை ரசிப்போம்.

    English summary
    Was it arbitrary when looking at some of the titles in MGR and Shivaji films? Did it is a real competition? Thats look like a comedy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X