»   »  எம்ஜிஆர் கிளாப் அடித்து துவக்கி வைத்த என்டிஆர் படம்!

எம்ஜிஆர் கிளாப் அடித்து துவக்கி வைத்த என்டிஆர் படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐதராபாத் : தெலுங்கு திரையுலகின் முதுபெரும் நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான மறைந்த என்டிஆர் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படத்தை அவருடைய மகன் பாலகிருஷ்ணா தயாரித்து, என்டிஆர்-ஆகவும் நடிக்கிறார்.

இப்படத்தின் துவக்க விழா, இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு படத்தைத் துவக்கி வைத்தார். தெலுங்கு, இந்தியில் உருவாக உள்ள இந்தப் படத்தை பின்னர் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

MGR starts with clap for NTR movie shoot

இந்தப் படத்தில் இடம்பெறும் படப்பிடிப்பு ஒன்றை எம்ஜிஆர் கிளாப் அடித்து துவக்கி வைப்பது போன்ற காட்சி இன்றைய துவக்க விழாவில் படமாக்கப்பட்டது. அதில் எம்ஜிஆர்-ஆக நடிப்பவரின் தோற்றம் கிட்டத்தட்ட எம்ஜிஆர் போலவே உள்ளது. படத்தில் ஓரிரு காட்சிகளில் மட்டும் எம்ஜிஆர் வருவார் எனக் கூறப்படுகிறது.

படத்தை எவ்வளவு விரைவில் எடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக எடுத்து முடித்து வரும் தசரா பண்டிகையின் போது வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். படத்தில் என்டிஆர் பற்றி மக்களுக்குத் தெரியாத சில விஷயங்களையும் காட்ட உள்ளதாகக் கூறப்படுகிறது.

English summary
Veteran actor NTR's biopic's opening ceremony was held in Hyderabad today. MGR starts with Clap the film shooting.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X