twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மறக்கமுடியுமா ’டிஸ்கோ டான்சர்’ படத்தை?....மைகேல் ஜாக்சன் பாராட்டிய டிஸ்கோ மன்னன் பப்பி லஹரி...

    |

    சென்னை: இந்தி இசைத்துறையைத்தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை தனது கானக்குரலால் கவர்ந்த லதா மங்கேஷ்கர் மறைந்த ஒருவாரத்தில் மீண்டும் ஒரு இசைத்துறையில் லெஜண்ட் டிஸ்கோ மன்னன் பப்பிலஹரி மறைந்துள்ளது இந்தி இசையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பட வாய்ப்புக்காக இப்படியா?... கவர்ச்சியில் அதகளம செய்யும் நிதி அகர்வால் !பட வாய்ப்புக்காக இப்படியா?... கவர்ச்சியில் அதகளம செய்யும் நிதி அகர்வால் !

    ஒரே வாரத்தில் மறைந்த இரண்டு இசை லெஜண்டுகள்

    ஒரே வாரத்தில் மறைந்த இரண்டு இசை லெஜண்டுகள்

    இசைக்கு மொழி கிடையாது என்பதற்கு உதாரணமாக பலவற்றை சொல்லலாம். கடந்த 8 ஆம் தேதி மறைந்த இந்தியாவின் நைட்டிங் கேல் லதாமங்கேஷகர் இந்தியா முழுவதும் அனைவர் மனதையும் கவர்ந்தவர். அதைத்தாண்டி உலகம் முழுவதும் தன் எழில் நிறைந்த குரலால் கவர்ந்தவர். அவரது மறைவுக்கு சீன, இலங்கை, அமெரிக்கா என முலகம் முழுவதும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தது சாட்சி.

    மேற்கு வங்கத்தின் இசைப்புயல்

    மேற்கு வங்கத்தின் இசைப்புயல்

    அதேபோல் இசையுலகில் ஒரு புதுவித புரட்சியை ஏற்படுத்தியவர் பப்பிலஹரி. இந்தியாவில் தனது இளம் வயதில் இசைத்துறையில் நுழைந்தவர் என்கிற பெருமைப்பெற்றவர் பப்பி லஹரி. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்த இசைப்புயல் பாலிவுட்டை 40 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிப்போட்டது. தாய் தந்தை இருவருமே இசைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் பப்பிலஹரியின் ரத்தத்தில் இயல்பிலேயே இசையார்வம் ஊறி இருந்தது. அவர் மிகச்சிறந்த பாடகராகவும் விளங்கினார்.

    80 களில் பாலிவுட்டை கலக்கிய டிஸ்கோ இசை

    80 களில் பாலிவுட்டை கலக்கிய டிஸ்கோ இசை

    1974 ஆம் ஆண்டு வங்காள படங்களுக்கு இசை அமைத்ததன் மூலம் 22 வயதில் இசையமைப்பாளராக திரையுலகில் நுழைந்த பப்பிலஹரியை குறுகிய காலத்தில் பாலிவுட் உலகம் அணைத்துக்கொண்டது. டிஸ்கோ இசை உலகை ஆக்கிரமித்த நேரம் ஸ்டீரியோ, டேப்ரெக்கார்டர்கள் கேசட்டுகள் இந்தியாவில் நுழைந்த நேரம் பப்பி லஹரியின் வித்தியாசமான டிஸ்கோ இசை இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது.

    மிதுன் சக்ரவர்த்திக்கு வாழ்வு கொடுத்த டிஸ்கோ டான்சர்

    மிதுன் சக்ரவர்த்திக்கு வாழ்வு கொடுத்த டிஸ்கோ டான்சர்

    1982 ஆம் ஆண்டு வெளியான டிஸ்கோ டான்சர் அதுவரை ஹீரோவாக பல இந்திப்படங்களில் நடித்து பெரிதாக பேசப்படாத மிதுன் சக்ரவர்த்தியை இந்திய அளவில் ரசிகர்களிடம் கொண்டுச் சேர்த்தது. அதன் பின்னர் மிதுன் சக்ரவர்த்தி தென் இந்திய ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டார். அதன் முக்கிய காரணமே பப்பிலஹரியின் இசைதான். அப்போது உலக அளவில் பிரபலமாக இருந்த டிஸ்கோ இசையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படத்தில் இந்த இரண்டு பெங்காளிகளும் ஒருவர் இசையமைக்க, ஒருவர் நடிக்க பாலிவுட் டிஸ்கோ இசையால் நிரம்பியது.

    இந்தியா, சோவியத் யூனியனை கலக்கிய டிஸ்கோ டான்சர்- மைக்கேல் ஜாக்சன் பாராட்டு

    இந்தியா, சோவியத் யூனியனை கலக்கிய டிஸ்கோ டான்சர்- மைக்கேல் ஜாக்சன் பாராட்டு

    டிஸ்கோ டான்சர் டிஸ்கோ டான்ஸை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம், ஏழை சிறுவன் பின்னர் தனது ஆடல், பாடல் திறமையால் பெரும் புகழ் அடைவதும், இடையில் வியாபார போட்டியால் தாயை இழப்பதும் அதிலிருந்து மீண்டு வருவதும் கதை. டிஸ்கோ டான்சருக்காக பப்பி லஹரி அமைத்த இசையில் அத்தனைப்பாடல்களும் ஹிட் அடித்தது. இந்தியா முழுவதும் இந்தி தெரியாதவர்களும் பாடலில் லயித்தனர். இந்தியாவில் மட்டுமல்ல அப்போதைய ஒன்றுபட்ட ரஷ்யாவான சோவியத் யூனியனிலும் படம் பெரும் புகழ் பெற்றது. ஒருமுறை மைக்கேல் ஜாக்சன் இந்தியா வந்திருந்தபோது பப்பிலஹரி சந்தித்துள்ளார். அப்போது மைக்கேல் ஜாக்சன் டிஸ்கோ டான்சர் படத்தின் இசை தன்னை கவர்ந்ததாக பாராட்டியுள்ளார்.

    உஷா உதுப்புக்காக இசை உருவாக்கியவர்

    உஷா உதுப்புக்காக இசை உருவாக்கியவர்

    அதன்பின்னர் பப்பிலஹரியின் பல படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. உஷா உதுப்புக்காகவே இசை அமைக்கப்பட்டதுபோல் பல பாடல்கள் டிஸ்கோ பாடல்களாக வெளிவந்து பெரும் வரவேற்பைபெற்றது. கோஹி ஹாஹா, அஹா நாச்சே நாச்சே, ஆர்மான் படத்தில் 'ரம்பா ஹோ ஹோ', அஞ்சான் படத்தில் 'ஹரி ஓம் ஹரி' போன்ற பாடல்கள் உஷா உதூப் பாடி பப்பிலஹரியின் குரலில் இன்றும் பாப் பாடல்களாக உள்ளன.

    பாலிவுட் இசையுலகில் நீங்கா இடம் பப்பிலஹரிக்கும் உண்டு

    இந்தி திரையுலகில் லட்சுமி காந்த் பியாரிலால், கல்யான்ஜி ஆனந்த்ஜி, எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன் வரிசையில் பப்பிலஹரிக்கும் இடம் உண்டு. ட80-கள் 90 களில் அமிதாப் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தார் பப்பிலஹரி, பியார்தே என்கிற பாடல் அமிதாப் படத்தில் பெரிய ஹிட் கொடுத்த பாடல் ஆகும். படத்தின் பாடல்கள் தவிர ஆல்பங்களும் வெளியிட்டு புகழ்பெற்றார் பப்பிலஹரி.

    இசையில் வெற்றி அரசியலில் தோல்வி

    இசையில் வெற்றி அரசியலில் தோல்வி

    பப்பிலஹரி அப்போதைய பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் ஸ்ரீரம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் தேர்தலில் திரிணமுல் வேட்பாட்பாளரிடம் தோற்றுப்போனார். அதன் பின்னர் அரசியலில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.

    தமிழில் டிஸ்கோ டான்ஸர் 'பாடும் வானம்பாடி' படம்

    தமிழில் டிஸ்கோ டான்ஸர் 'பாடும் வானம்பாடி' படம்

    தமிழில் கலக்கிய பாடும் வானம் பாடி படத்துக்கு சங்கர் கணேஷுடன் இணைந்து பப்பி லஹரி இசையமைத்திருந்தார். படம் நன்றாக ஓடியது. இப்படம் பப்பிலஹரியால் ஹிட் அடித்த இந்திப்படமான டிஸ்கோ டான்சர் படத்தின் தழுவலே. இந்தப்படத்தில் நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த்பாபு மிதுன் நடித்த வேடத்தில் நடித்தார். எஸ்பிபியின் கந்தர்வ குரலில் அத்தனை பாடல்களும் ஹிட் ஆனது. அதன் பின்னர் மேலும் இரண்டு படங்களுக்கு பப்பிலஹரி இசையமைத்திருந்தார்.

    டிஸ்கோ மன்னன் மறைவு சோகத்தில் ரசிகர்கள்

    டிஸ்கோ மன்னன் மறைவு சோகத்தில் ரசிகர்கள்

    இந்திப்பட உலகில் வழக்கமான இசையைத்தாண்டி ஒரு மாற்றமான இசையாக டிஸ்கோ இசையை புகுத்தி இளைஞர்களை கட்டிப்போட்டவர் பப்பிலஹரி. டிஸ்கோ இசை என்றால் ஞாபகத்துக்கு வருபவர் பப்பி லஹரிதான். டிஸ்கோ இசை மன்னன் பப்பிலஹரியின் உடையமைப்பும் அப்படித்தான் இருக்கும் தங்க நகைகள் கிலோ கணக்கில் போட்டிருப்பார், வித்தியாசமான ஹேர்ஸ்டைல், உடை, கண்ணாடி என அனைத்திலும் வித்தியாசமானவர் பப்பிலஹரி. அவரது திடீர் மரணம் இந்தி ரசிகர்களை தாண்டி இந்திய ரசிகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    English summary
    Michael Jackson Appreciated Disco King Bappi Lahiri - A Sweet Memory
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X