»   »  ஒரு தலைமுறையே மாறிப்போச்சு: கமலின் மைக்கேல் மதனகாமராஜனை அடிச்சுக்க ஆளில்லை

ஒரு தலைமுறையே மாறிப்போச்சு: கமலின் மைக்கேல் மதனகாமராஜனை அடிச்சுக்க ஆளில்லை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் ஹாஸன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன் நான்கு கதாபாத்திரங்களில் நடித்த படம் மைக்கேல் மதன காமராஜன். காமெடியில் கமல் கலக்கியிருந்த இந்த படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இருப்பினும் இந்த படத்தை அடித்துக் கொள்ள இன்னொரு படம் இன்னும் வரவில்லை என்கிறார்கள் பலர்.

பீம்பாய்

பீம்பாய்

பீம் பாய் பீம் பாய் அந்த லாக்கரில் இருக்கும் ஆறு லட்சத்தை எடுத்து அவிநாசி நாய் மூஞ்சியில விட்டெறி என காமேஸ்வரன் கமல் அய்யர் ஆத்து பாஷையில் பேசியதை தான் மறக்க முடியுமா?

திருட்டுப் பாட்டி

திருட்டுப் பாட்டி

படத்தில் ஊர்வசியின் பாட்டி திருமண வீட்டில் பொருட்களை நைசாகத் திருடி நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைத்தார். இறுதிக் காட்சியில் பறந்து பறந்து சண்டை போட்டு ஓல்டு இஸ் கோல்டு என்று காட்டினார்.

மீன்

மீன்

திருமண வீட்டில் சாம்பாரில் மீன் விழுந்த பயத்தில் கமல் நிற்கும்போது இரண்டு பேர் வாட் டூ யூ மீன்? ஐ மீன் வாட் ஐ மீன், பட் தே கான்ட் பீ சோ மீன் என ஆங்கில மீனை பற்றி பேச கமல் தமிழ் மீனை நினைத்து பதறும் காட்சி இன்றும் நினைவில் உள்ளது.

மெட்ராஸ் பாஷை

மெட்ராஸ் பாஷை

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமல் அய்யர் பாஷை, மெட்ராஸ் பாஷை பேசியிருப்பார். கமல் பாலக்காட்டு தமிழில் ஓ என சொல்வதே தனி அழகு. கதை கேளு கதை கேளு என படத்தின் டைட்டில் கார்டு போடும்போதே பாடல் மூலம் கதையை கூறியிருப்பார்கள்.

கிளாசிக்

கிளாசிக்

படம் வெளியாகி 26 ஆண்டுகள் ஆனாலும் மைக்கேல் மதன காமராஜனை வெல்ல இன்னும் எந்த படமும் வரவில்லை என்றே கூறப்படுகிறது. நீங்க என்ன சொல்றீங்க?

English summary
Kamal Haasan's Michael Madana Kama Rajan has turned 26 today. The comedy superhit movie is still the best in its category.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil