»   »  மிக மிக அவசரம்... ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களை வெளியிட்டார் ஏ ஆர் முருகதாஸ்!

மிக மிக அவசரம்... ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களை வெளியிட்டார் ஏ ஆர் முருகதாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீ ப்ரியங்கா நாயகியாக நடித்துள்ள மிக மிக அவசரம் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்களை இன்று வெளியிட்டார் இயக்குநர் ஏஆர் முருகதாஸ்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதல் முறையாக இயக்கியுள்ள படம் மிக மிக அவசரம். இது ஒரு போலீஸ் கதை. ஆனால் இதுவரை யாரும் சொல்லாத புதிய களம், கோணத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் கூறியிருந்தார்.


Miga Miga Avasaram first look released

படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்களை இன்று காலை 10 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார் இயக்குநர் ஏஆர் முருகதாஸ்.


மிக மிக அவசரம் படத்தில் ஸ்ரீப்ரியங்காவுடன் அவருடன் ஈ ராமதாஸ், முத்துராமன், ஹரீஷ், ஆண்டவன் கட்டளை அரவிந்த், லிங்கா, சக்தி சரவணன், வெற்றிக்குமரன், வீகே சுந்தர், சாமுண்டி சங்கர் (அறிமுகம்) ஆகியோர் நடித்துள்ளனர்.


இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.


Miga Miga Avasaram first look released

கதை வசனத்தை இயக்குநர் ஜெகன்நாத் எழுத, பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார். சுதர்ஸன் எடிட்டிங் செய்துள்ளார்.


திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் சுரேஷ் காமாட்சி. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பு இது.

English summary
Ace director AR Murugadass has been released the first look of Suresh Kamatchi's debut directorial movie Miga Miga Avasaram today at his Twitter pager.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil