»   »  மிக மிக அவசரம்... முதல் டீசரை வெளியிட்டார் இயக்குநர் சேரன்! #MigaMigaAvasaram

மிக மிக அவசரம்... முதல் டீசரை வெளியிட்டார் இயக்குநர் சேரன்! #MigaMigaAvasaram

Posted By:
Subscribe to Oneindia Tamil

சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் சீமான், ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ள மிக மிக அவசரம் படத்தின் முதல் டீசரை இயக்குநர் சேரன் இன்று மாலை வெளியிட்டார்.

பெண் போலீசாரின் முக்கியத்துவத்தை, களத்தில் அவர்கள் படும் துயரங்களை நெத்தியடியாகச் சொல்லும் படம் மிக மிக அவசரம். தயாரிப்பாளராக இருந்த சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்துள்ளார்.


Miga Miga Avasaram teaser lauch

இந்தப் படத்தின் முதல் மோஷன் போஸ்டரை இயக்குநர் பாரதிராஜா சில வாரங்களுக்கு முன் வெளியிட்டார்.


இப்போது முதல் டீசர் வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் சேரன் இன்று வெளியிட்டார். நிகழ்ச்சியில் இயக்குநர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் ஜே சதீஷ்குமார், இயக்குநர் ஈ ராமதாஸ், கதை வசனம் எழுதிய இயக்குநர் ஜெகன், படத்தில் நடித்த வீகே சுந்தர், பிஆர்ஓ ஜான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Miga Miga Avasaram teaser lauch

படத்தின் ட்ரைலரை விரைவில் பிரமாண்ட விழாவில் வெளியிடவிருக்கிறார் சுரேஷ் காமாட்சி.

English summary
The trailer of Suresh Kamatchi's Miga Miga Avasaram was launched by Cheran today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil