»   »  மிக மிக அவசரம்... அப்படி என்னதான் 'அவசரம்'? ஆர்வத்தைத் தூண்டிய டீசர்!!

மிக மிக அவசரம்... அப்படி என்னதான் 'அவசரம்'? ஆர்வத்தைத் தூண்டிய டீசர்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத்தான் போலீஸ். ஆனால் அந்த போலீஸ் துறை ஒழுக்கமாக உள்ளதா? குறிப்பாக ஆண் போலீசும் பெண் போலீசும் இணைந்து பணியாற்றும் பகுதிகளில் அந்த ஒழுக்கமும் கண்ணியமும் பின்பற்றப்படுகிறதா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இதுவரை எந்தப் படத்திலும் பதில் கிடைத்ததில்லை.


உண்மையில் பெண் போலீசாருக்குப் பிரச்சினை வருவதே அவர்கள் சீருடையிலிருந்துதான்.


Miga Miga Avasaram teaser review

ஈழத்தில் விடுதலைப் புலிகள் படையில் பெண் புலிகள் கணிசமாக உண்டு. எல்லோரும் இளம் பெண்கள்தான். ஆனால் ஒரு முறை கூட அங்கே பெண்புலிகளிடம், ஆண் வீரர்கள் எல்லை மீறியதில்லை. அப்படி ஒரு சிறு செய்தி கூட ஈழத்திலிருந்து நம் காதுகளை எட்டியதே இல்லை. காரணம் புலிகளின் கட்டுப்பாடு என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அவர்களின் சீருடை. பெண் புலிகளின் சீருடை கொஞ்சமும் வக்கிரத்தைத் தூண்டாத அளவுக்கு கண்ணியமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.


ஆனால் தமிழகத்து பெண் போலீசாருக்குத் தரப்பட்டிருக்கும் இறுக்கமான சீருடை அவர்களை காமக் கண்ணோட்டத்துடன் சக ஆண் போலீசாரை அல்லது பார்வையாளர்களைப் பார்க்கத் தூண்டுகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே உண்டு. அதன் தொடர்ச்சிதான் பெண் போலீசார் சந்திக்கும் இதர இம்சைகள்.


இந்தக் கோணத்தில் தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் படமெடுத்திருக்கிறார்களா, தெரியவில்லை. அந்தக் குறையைப் போக்க வருகிறது மிக மிக அவசரம். படத்தின் முதல் டீசரை இயக்குநர் சேரன் வெளியிட்டார். பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் இந்த டீசருக்கு பெரும் வரவேற்பும், கவனமும் கிடைத்துள்ளது.டீசரின் முதல் காட்சியில் சைரன் சத்தத்துக்கு மத்தியில் ஒரு செல்போன் ஒலிக்க, தன் கீழ் பணியாற்றும் இளம் பெண் போலீசை வக்கிரமாக வர்ணிக்கிறார் அந்த போலீஸ் அதிகாரி. 'இது தப்பில்லைங்களா சார்...' என அந்த இளம் கெஞ்ச, கேட்கிற நமக்கே மனசு இளகிப் போகிறது. தன் ஆசைக்கு இணங்க மறுக்கும் அந்தப் பெண் போலீசை கொளுத்தும் வெயிலில் ஒரு பெரிய பாலத்தில் நிற்க வைத்துக் கொடுமைப்படுத்துகிறார் அந்த போலீஸ் அதிகாரி. பெண் போலீஸ் அவரது ஆசைக்கு இணங்குகிறாரா.. வேறென்னென்ன தொல்லைகளை அவர் அனுபவிக்கிறார் என்பதெல்லாம் இந்தப் படத்தின் காட்சிகளாக இருக்கும் என யோசிக்க வைத்திருக்கிறார், இந்தப் படத்தை முதல் முறையாக இயக்கியுள்ள சுரேஷ் காமாட்சி. படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். பெண் போலீசாக நடித்திருப்பவர் ஸ்ரீப்ரியங்கா. டீசரிலேயே இவரது நடிப்பு பேச வைத்திருக்கிறது.


பதம் பார்க்க ஒரு சோறு போதும் என்பார்களே... அப்படி, வரவிருக்கும் இந்தப் படம் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க இந்த ஒரு டீசரே போதும். பர்பெக்ஷன், தரம், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத படமாக மிக மிக அவசரம் அமையும் என்பதை அடித்துச் சொல்கிறது இந்த டீசர்!

English summary
Review of Suresh Kamatchi's debut directorial Miga Miga Avasaram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil