»   »  தங்க மகனில் தனுஷின் ஆபாசம்!- பொங்கும் பால் முகவர் சங்கம்

தங்க மகனில் தனுஷின் ஆபாசம்!- பொங்கும் பால் முகவர் சங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் வெளியாகியுள்ள தங்க மகன் படத்தில் தனுஷ் ஆபாச வார்த்தைகளைப் பிரயோகித்துள்ளதாகவும், ஆபாசக் காட்சிகளை வைத்துள்ளதாகவும் பால் முகவர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

பீப் பாடலுக்காக கண்டனம் தெரிவித்து, அந்தப் பாடலை உருவாக்கிய சிம்பு, அனிருத் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர் பால் முகவர் சங்கத் தலைவர் பொன்னுசாமியும் மற்றும் அவர் மனைவியும்.


Milk distributors association condemns Dhanush

இந்த புகாரை விசாரிக்க கமிஷனர் அலுவலகத்துக்கு இருவரும் வரவழைக்கப்பட்டனர்.


அவர்களிடம் ஆபாச பாடல் குறித்தும், அதன் காரணமாக அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டது குறித்தும் விரிவாக கேட்டு வாக்குமூலம் பதிவு செய்தனர்.


அப்போது, சிம்புவையும் அனிருத்தையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மேலும் ஒரு புகாரையும் பதிவு செய்தனர் இருவரும்.


Milk distributors association condemns Dhanush

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பொன்னுசாமி, சிம்பு, அனிருத் மீது சாதாரண பிரிவில்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டினார்.


அவர் மேலும் கூறும்போது, ‘‘தனுஷ் நடித்த தங்கமகன் படத்தில் பெண்களை காம பொருளாக சித்தரித்துள்ளார். சிம்பு, அனிருத் ஆகியோரின் பீப் பாடலில் இடம்பெற்ற ஆபாச வார்த்தை தங்க மகன் படத்திலும் இடம்பெற்றுள்ளது கண்டிக்கத்தக்கது," என்றார்.

English summary
Milk Distributors Association president Ponnusamy condemned Dhanush for using abusive words in Thanga Magan movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil