»   »  ஆதரவற்ற குழந்தைகளுக்கு மைம் கோபி தந்த ஸ்பெஷல் விமானப் பயணம்!

ஆதரவற்ற குழந்தைகளுக்கு மைம் கோபி தந்த ஸ்பெஷல் விமானப் பயணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆதரவற்ற 20 குழந்தைகளை விமானத்தில் கோவை மற்றும் ஊட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார் நடிகர் மைம் கோபி.

கபாலி, மாயா, மெட்ராஸ் படங்களில் நடித்தவர் மைம் கோபி. ஜி மைம் ஸ்டூடியோ என்கிற பெயரில் நடிப்பு பயிற்ச்சி பள்ளியும் நடத்தி வருகிறார்.

ராம்குமார் பிரேத பரிசோதனை விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தந்தை பரமசிவம் மனு தாக்கல்

ஆதரவற்ற குழந்தைகளுக்காக பல கலை நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறார். அதில் ஒரு பகுதியாக ஆதரவற்ற குழந்தைகளை மகிழ்விக்கும் நோக்கத்தில் 20 குழந்தைகளை சென்னையிலிருந்து விமானம் மூலமாக கோவைக்கு அழைத்துச் சென்று ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கவைத்து, அங்கிருந்து ஊட்டிக்கு சுற்றுலா பகுதிகளுக்கு செல்கிறார்.

இதுபற்றி மைம்கோபி கூறுகையில், "ஆதரவற்ற குழந்தைகளுக்கு விமானப் பயணம் என்பது ஒரு கனவுபோல. அதை நனவாக்கும் ஆசையில் இந்த முயற்சியை ஆரம்பித்து இருக்கிறோம்.

ராம்குமார் பிரேத பரிசோதனை விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தந்தை பரமசிவம் மனு தாக்கல்

குழந்தைகளுக்கு உயர்தரமான ஆடைகள் அணிவித்து சொகுசுக் கார்களில் அவர்களை அழைத்து சென்று விமானத்தில் பயணம் செய்து நட்சத்திர ஹோட்டலில் தங்கவைத்து சுற்றுலாத் தலங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று மகிழ்விக்க வேண்டும் என்கிற நீண்ட நாள் எண்ணம் இன்று நிறைவேறியிருக்கிறது.

ராம்குமார் பிரேத பரிசோதனை விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தந்தை பரமசிவம் மனு தாக்கல்

குழந்தைகள் அவ்வளவு மகிழ்வோடு இருக்கிறார்கள். இந்த நிகழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் எனது மைம்டு ஸ்டுடியோ நிர்வாகிகள், நண்பர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார்.

English summary
Actor Mime Gopi has made arrangements for a flight trip for orphanage children Today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil