»   »  ஜெ. ரூ.10 லட்சம் உதவி: இசையமைப்பாளர் கோவர்த்தனத்திடம் வழங்கினார் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

ஜெ. ரூ.10 லட்சம் உதவி: இசையமைப்பாளர் கோவர்த்தனத்திடம் வழங்கினார் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: இசையமைப்பாளர் கோவர்த்தனத்திடம் முதல்வரின் 10 லட்சம் ரூபாய் நிதியை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வழங்கினார்.

சேலம் பகுதியை சேர்ந்த இசையமைப்பாளர் கோவர்த்தன்(89) தமிழில் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். மேலும் தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா ஆகியோருடனும் பணியாற்றியிருக்கிறார்.

Minister Edappadi Palanichamy give Chief Minister fund Kovarthanam

சென்னையில் வசித்து வந்த கோவர்த்தன் வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து சேலம் பகுதிக்கு சென்று அங்கே வசித்து வந்தார். மகள், மகன் இருந்தும் கோவர்த்தன் வறுமையில் வாடத் தொடங்கினார்.

கோவர்த்தன் வறுமையில் வாடுவதைத் தெரிந்து கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, எம்ஜிஆர் அறக்கட்டளையில் இருந்து ரூ10 லட்சம் நிதி வழங்குவதாக கடந்த வாரம் அறிவித்தார்.

இந்நிலையில் இன்று முதல்வரின் நிதியை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி நேரில் சென்று கோவர்த்தனிடம் வழங்கினார்.

10 ஆயிரத்தை அவரின் கையில் கொடுத்த அமைச்சர் 10 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறோம். மாதா மாதம் உங்களுக்கு வங்கியில் இருந்து வட்டி ரூ.8125 கிடைக்கும்.

இந்த மாதம் பணம் ரூ.10 ஆயிரத்தை முதலமைச்சர் அவர்கள் பணமாக தர கூறி பணத்தை கொடுத்து அனுப்பி உள்ளார் என கூறி பணம் ரூ.10 ஆயிரத்தை வழங்கினார்.

அமைச்சரிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்ட கோவர்த்தனம் மனைவி இந்திராபாய் இருவரும், இந்த உதவிகளை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என கலங்கிய கண்களுடன் அமைச்சரிடம் கூறினர்.

English summary
Today Minister Edappadi Palanichamy delivered Chief Minister fund to music Composer Kovarthanam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil