Mirai Box Office: லோகா போலவே பாக்ஸ் ஆபீஸை மிரட்டுமா மிராய்.. முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
ஹைதராபாத்: தமிழ் சினிமாவில் பெரிதாக எதிர்பார்க்கும் படங்கள் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளை படைக்க முடியாமல் திணறி வரும் சூழலில் தெலுங்கு, மலையாள படங்கள் இந்த ஆண்டு சக்கைப் போடு போட்டு வருகின்றன. அதிலும், குறைந்த பட்ஜெட்டில் சூப்பர் ஹீரோ படங்கள், ஃபேண்டஸி படங்களை எப்படி எடுக்க வேண்டும் என்கிற பாடங்களையும் சேர்த்து எடுத்து வருவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
கார்த்திக் கட்டமனேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, மனோஜ் மஞ்சு, ஸ்ரேயா, ஜகபதி பாபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள மிரா படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளி வருகின்றன. சோஷியல் மீடியாவில் அந்த படத்துக்கு இயக்குநர் ராம் கோபால் வர்மாவும் பாகுபலி படத்துக்குப் பிறகு இன்னொரு பிரம்மாண்டம் என கொடுத்த விமர்சனம் பக்க பலமாக மாறியுள்ளது.

ஹனுமான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தேஜா சஜ்ஜாவுக்கு பாக்ஸ் ஆபீஸில் இன்னொரு வெற்றிப் படமாக மிராய் அமையுமா? இந்தி ரசிகர்களை கவரும் விதத்தில் உள்ள ராமாயண இதிகாச கனெக்ஷன் எந்தளவுக்கு வொர்க்கவுட் ஆகும் என்பதை பொறுத்து பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய எழுச்சி உண்டாகும் என்கின்றனர்.
மிராய் முதல் நாள் வசூல்: தேஜா சஜ்ஜா, ரித்திகா நாயக், மனோஜ் மஞ்சு, ஸ்ரேயா சரண் லீடு ரோலில் நடித்துள்ள மிராய் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முதல் நாளில் இந்தியளவில் இந்த படம் 12 கோடி ரூபாய் வசூலை ஈட்டி மிகப்பெரிய ஓபனிங்கை கொடுத்துள்ளதாக சாக்னிக் வெப்சைட் தகவல் தெரிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக 10.6 கோடி ரூபாய் வசூலை தெலுங்கு பதிப்பில் மட்டுமே இந்த படம் ஈட்டியிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக இந்தியில் 1.25 கோடியும் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட வெர்ஷன்களில் தலா 5 லட்சம் ரூபாயையும் இந்த படம் முதல் நாளில் ஈட்டியுள்ளது. ஹனுமான் திரைப்படம் முதல் நாளில் இந்தியளவில் 15 கோடி வசூலை ஈட்டிய நிலையில், மிராய் திரைப்படம் 12 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக கூறுகின்றனர்.

உலகளவில் எத்தனை கோடி வசூல்: ஹனுமான் படத்தின் ஓபனிங்கை விட மிராய் திரைப்படம் முதல் நாளில் சற்றே குறைந்த ஓபனிங்கை பெற்றுள்ளது என்றும் படத்திற்கு கிடைத்துள்ள பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மகாவதார் நரசிம்மா படம் முதல் நாளில் வெறும் 1.75 கோடி தான் வசூல் செய்தது. ஆனால், அதன் பின்னர் 300 கோடி வசூல் செய்து சினிமா உலகையே வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. மிராய் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் 18 - 20 கோடி வரை வசூல் செய்திருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியில் பிக்கப் ஆகிவிட்டால்: தெலுங்கு திரையுலகம் தொடர்ந்து இந்தி ரசிகர்களை டார்கெட் செய்தே புராண ஃபேண்டஸி படங்களை உருவாக்கி வருகின்றனர். ஹனுமான் படத்தை போலவே ராமாயண பேக்ட்ராப்பில் உருவாகியுள்ள மிராய் திரைப்படம் இந்தி ரசிகர்களை கவர்ந்துவிட்டால் இந்த படமும் 300 கோடி வசூலை அடைவது சாத்தியம் தான் என்கின்றனர். 60 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் முதல் நாளே 20 கோடி வரை வசூல் செய்துள்ள நிலையில், முதல் வார இறுதி நாட்கள் முடிவில் எந்தளவுக்கு வசூல் வேட்டை ஆடுகிறதோ அதை பொறுத்து தான் படத்தின் வெற்றி தீர்மானமாகும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











