»   »  மிர்ச்சி சிவா- பாபி சிம்ஹா நடிக்கும் மசாலா படம்

மிர்ச்சி சிவா- பாபி சிம்ஹா நடிக்கும் மசாலா படம்

Posted By:
Subscribe to Oneindia Tamil


‘ஆல் இன் பிக்சர்ஸ்' முதல் தயாரிப்பாக வெளி வருகிறது ‘ மசாலா படம்'. மிர்ச்சி சிவா, பாபி சிம்ஹா, புதுமுகம் கவுரவ் மற்றும் ‘நில் கவனி செல்லாதே' நடித்த லக்ஷ்மி தேவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘வெண்ணிலா கபடி குழு' படத்தை ஒளிப்பதிவு செய்த லக்ஷ்மன் குமார் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

புதுமுகம் கார்த்திக் ஆச்சார்யா இப்படதிற்கு இசையமைக்கிறார். படத்தொகுப்பை ரிச்சர்ட் கெவின் மேற்கொள்கிறார் , கலை இயக்கம் விஜி, நிர்வாக தயாரிப்பை அப்சர் கவனிக்கிறார்.

Mirchi Siva - Bobby Simha in Masala Padam

வெண்ணிலா கபடி குழு, குள்ள நரி கூட்டம், போடா போடி, பாகன் , தில்லு முல்லு' என பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து லக்ஷ்மன் குமார் இப்படத்தை தயாரிப்பாளர் விஜய ராகவேந்திராவுடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார்.

படம் குறித்து லஷ்மன் குமார் கூறுகையில், 'ஒரு ஒளிபதிவாளருக்கு ஒளியை பதிவு செய்வது மட்டும் பிரதானமில்லை. சுற்றி நடக்கும் விஷயங்களை கண்டும், கேட்டும், உணர்ந்தும் பதிவு செய்துக் கொள்வேன். அப்படி என்னுடைய திரை வாழ்வில் நான் அடிக்கடி சந்திக்க நேர்ந்த ஒரு விஷயம் மசாலா படங்கள் குறித்த விவாதம். அதை ஒட்டி வரும் கருத்துகள்.

நம்முள் இந்த அளவுக்கு ஊடுருவும் இந்த மசாலா படத்தின் தாக்கத்தை முதல் படமாக பதிவு செய்துக் கொள்ள விரும்பினேன். இப்படி ஒரு வித்தியாசமான கருவை மக்கள் இடையே கொண்டு செல்ல பிரதான கருவிகளாக மிர்ச்சி சிவாவும், பாபி சிம்மாவும் நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் இசை மிகவும் பேசப்படும். இறுதிக் கட்ட பணிகள் நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது. கோடை விடுமுறையில் வெளி ஆக உள்ளது 'மசாலா படம்', என்றார்.

English summary
Mirchi Siva and Boby Simha are joining together for Masala Padam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil