»   »  காதலர் தினத்தில் வெளியாகிறது ஜெயம் ரவி - லட்சுமி மேனனின் 'மிருதன்'

காதலர் தினத்தில் வெளியாகிறது ஜெயம் ரவி - லட்சுமி மேனனின் 'மிருதன்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயம் ரவி - லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் மிருதன் திரைப்படத்தின் பாடல்களை வருகின்ற 9 ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

நாய்கள் ஜாக்கிரதை பட புகழ் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடித்திருக்கும் படம் மிருதன். கடந்த 31ம் தேதி இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.


Miruthan Audio & Release Date Here

இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை வருகின்ற ஜனவரி 9 ம் தேதியன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.


தமிழின் முதல் ஸோம்பி திரைப்படமாக உருவாகும் மிருதன் படத்தில் ஸோம்பிகளிடமிருந்து மனிதர்களை காப்பாற்றும் வீரனாக ஜெயம் ரவியும், மருத்துவராக லட்சுமி மேனனும் நடித்திருக்கின்றனர்.


முதல் முறையாக லட்சுமி மேனனுடன் இணைந்து ஜெயம் ரவி நடித்திருப்பது, படத்திற்குப்படம் வித்தியாசம் காட்டும் ஜெயம் ரவி போன்ற காரணங்களால் ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


மேலும் கடந்த ஆண்டில் ஜெயம் ரவி நடித்து வெளியான தனி ஒருவன், ரோமியோ ஜூலியட் மற்றும் பூலோகம் ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக மாறி ஹாட்ரிக் நாயகன் என்ற அந்தஸ்தை ரவிக்கு பெற்றுத் தந்தது.


இந்நிலையில் இந்த ஆண்டிலும் ஜெயம் ரவி தனது வெற்றி நாயகன் அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் எழுந்துள்ளது.


முன்னதாக பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட மிருதன் தற்போது பிப்ரவரி 12 ம் தேதியில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


மிருதன் என்பதற்கு ஜெயிப்பவன் மற்றும் ஸோம்பி என்ற 2 அர்த்தங்கள் உண்டு. மனிதர்களைக் காக்க ஸோம்பிகளை எதிர்த்துப் போராடும் ஜெயம் ரவி அதில் வெற்றி பெற்றாரா? என்பதே படத்தின் கதையாம்.

English summary
Jayam Ravi, Lakshmi Menon Starrer Miruthan Audio Release on January 9. This Film will Be Release on February 12 for Valentines Day Special.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil