»   »  'மிருதன்' தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம் ... ஜெயம் ரவிக்கு லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள்

'மிருதன்' தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம் ... ஜெயம் ரவிக்கு லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'நாய்கள் ஜாக்கிரதை' புகழ் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் மிருதன்.

தமிழின் முதல் ஸோம்பி படம் என்ற பெருமையுடன் வெளிவந்திருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து இருக்கிறார்.


தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் நடித்திராத போக்குவரத்துக் காவலர் வேடத்தில் நடித்திருக்கும் ஜெயம் ரவி மிருதனாக ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தாரா? பார்க்கலாம்.


மிருதன்

"மிருதன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று ஜெயம் ரவி போக்குவரத்துக் காவலராக அறிமுகமாகும் காட்சியை பதிவிட்டிருக்கிறார் தெறி பாய்.


அடுத்த பிளாக்பஸ்டர்

"மிருதன் நடிகர் ஜெயம் ரவிக்கு இன்னொரு பிளாக்பஸ்டர்" என்று மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார் ரிப்கான்.


தமிழ் சினிமாவை

"மிருதன் தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. ஜெயம் ரவியை மிருதனாக நேசித்தேன். படம் எப்போது முடிந்தது என்பதைக் கூட உணர முடியவில்லை" என்று படத்தின் நீளத்தைப் புகழ்ந்திருக்கிறார் கோபிநாதம்.


இதற்கு முன் பார்த்திராத

"மிருதன் தமிழ் சினிமாவில் இதற்கு முன் பார்த்திராத ஒரு ஸோம்பி திரைப்படம். ஜெயம் ரவியின் நடிப்பும், இமானின் பின்னணி இசையும் சூப்பர்" என்று பாராட்டி இருக்கிறார் கண்ணன்.


எதிர்பார்த்திராத

"மிருதன் பார்த்தேன். ஜெயம் ரவி மற்றும் சக்தி சவுந்தர்ராஜனிடம் இருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை" என்று பாராட்டி இருக்கிறார் புகழ்.


அற்புதமாக

"மிருதன் பார்த்தேன் மிகவும் அற்புதமான ஒரு படம். திகிலை ஏற்படுத்தவும் தவறவில்லை" என்று புகழ்ந்திருக்கிறார் தங்கராஜ்.


கடைசி அரைமணி

"கடைசி அரைமணி நேரக்காட்சிகளும், அந்தக் காட்சிகளில் வெளிப்படும் ஜெயம் ரவியின் சிறந்த நடிப்பும், அபாரமான உழைப்பு" என்று படத்தின் முடிவைப் பாராட்டி இருக்கிறார் கவுண்டமணி.


மொத்தத்தில் ஜெயம் ரவியின் மிருதன் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.English summary
Jayam Ravi, Lakshmi Menon Starrer Miruthan Today Released Worldwide, Written and Directed by Shakti Soundar Rajan - Live Audience Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil