»   »  ரசிகர்களின் ஸோம்பி மோகத்தால், முதல் வாரத்தில் 20 கோடிகளைத் தாண்டிய 'மிருதன்'

ரசிகர்களின் ஸோம்பி மோகத்தால், முதல் வாரத்தில் 20 கோடிகளைத் தாண்டிய 'மிருதன்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயம் ரவி, லட்சுமி மேனன், காளி வெங்கட் நடிப்பில் கடந்த வாரம் வெளியான மிருதன் திரைப்படம் 3 நாட்களில் 20 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்து சாதனை செய்திருக்கிறது.

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான மிருதன் பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது.


Miruthan Opening Weekend Box Office Collection

தமிழின் முதல் ஸோம்பி திரைப்படம் என்ற பெருமையுடன் வெளியான மிருதன் தியேட்டர்களில் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடி வருகிறது.இந்நிலையில் படம் வெளியான முதல் வாரத்தில் எவ்வளவு வசூல் செய்தது என்பதை ஜெயம் ரவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.


மிருதன் வெளியான முதல் வாரத்தில் இந்தியாவில் 10.66 கோடிகளை வசூலித்திருக்கிறது. மேலும் உலகளவில் இந்தியாவையும் சேர்த்து 20.13 கோடிகளை மிருதன் வசூல் செய்துள்ளது.


என்று தெரிவித்திருக்கும் ஜெயம் ரவி இந்த விவரங்களை மிருதன் படத்தின் விநியோக உரிமைகளை வாங்கிய அய்ங்கரன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.


மிருதன் படத்தின் வசூலால் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து உருவாகவிருக்கும், போகன் உள்ளிட்ட படங்களுக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும்போட்டி உருவாகும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.


English summary
Jayam Ravi Tweeted "#Miruthan TN Opening Weekend 3 day Collection: 10.66 Crs. Worldwide Weekend including ROI and TN BO: 20.13 Crs. Official from Ayangaran".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil