»   »  மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க!

மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சன் டிவியில் ஞாயிறு தோறும் குழந்தைகள் நிகழ்ச்சி நடத்தும் இமான் அண்ணாச்சியின் பிரபல வசனம்தான் மிஸ் பண்ணிடாதீங்க... அப்புறம் வருத்தப்படுவீங்க.

இதனையே ஒரு படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர். இது நகைச்சுவை படம் என்பதால் இந்த தலைப்பை வைத்துள்ளனர்.

.ஜமுனா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக தஞ்சை கே.சரவணன் தயாரிக்கும் படம் "மிஸ்பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க". இந்த படத்தின் கதாநாயகனாக சுரேஷ்குமார் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷதா நடிக்கிறார்.

பாண்டியராஜன்

பாண்டியராஜன்

மற்றும் பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், கிரேன்மனோகர், கொட்டாச்சி, பிளாக்பாண்டி, குள்ள சங்கர், டி.பி.கஜேந்திரன்,போண்டாமணி, கோவை செந்தில், ரவி, தேவிஸ்ரீ, சுரேகா, கோவைபானு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர்

அறிமுக இயக்குநர்

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இசை, தயாரிப்பு ஆகிய பொறுப்புக்களை தஞ்சை.கே.சரவணன் ஏற்றுள்ளார். இவர் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் இப்படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.ஹெச்.அசோக் ஒளிப்பதிவு செய்கிறார்.

கவர்ச்சி இல்லை

கவர்ச்சி இல்லை

படம் பற்றி அவர் கூறும்போது... இது முழுக்க முழுக்க நகைச்சுவை படம். காமெடி என்றால் இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள் கிடையாது, கிளாமர் கிடையாது அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும் என்கிறார் இயக்குநர்.

காமெடிக்கு கியாரண்டி

காமெடிக்கு கியாரண்டி

இந்த "மிஸ்பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க" படத்தில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர். காமெடிக்கு நாங்க கியாரண்டி என்கிறார்.

ஒரு கல்லூரியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது அங்கிருந்த மாணவர்கள் காமெடி காட்சிகளை பார்த்து அனைவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். கல்லூரியே கலகலப்பாகிவிட்டது. அதுவே எங்கள் படத்திற்கு கிடைத்த ஒரு வெற்றிதான். படம் ஜனவரி இறுதியில் வெளியாக உள்ளது என்கிறார் இயக்குனர் தஞ்சை.கே.சரவணன்.

English summary
Miss Pannidathenga Appuram Varutha Paduveenga, new Tamil movie produced by Jamuna Films starrer Suresh Kumar, Akshatha, Pandiarajan, Surekh.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil