»   »  கள்ளக்காதலனைக் கைப்பிடிக்க விபத்தில் செத்துப் போனதாக நாடகமாடி மாயமான நடிகை கைது

கள்ளக்காதலனைக் கைப்பிடிக்க விபத்தில் செத்துப் போனதாக நாடகமாடி மாயமான நடிகை கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த மராத்திய துணை நடிகை அல்கா இன்று சென்னையில் அவரது காதலருடன் கைது செய்யப் பட்டுள்ளார். கைது செய்யப் பட்ட அவர்களிடம் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

கார் விபத்து, படுகொலை, கடத்தல் என தொடர்ந்து மர்மம் நீடித்து வந்த மராத்திய துணை நடிகையின் வழக்கில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் கடத்தப் பட்டாரா அல்லது காணாமல் போனாரா எனத் தொடர்ந்து நீடித்து வந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டுள்ளது. ஆம், அல்கா தனது காதலனை மணப்பதற்காக கணவரை ஏமாற்ற நடத்திய நாடகம் அம்பலமாகியுள்ளது.

மராத்திய துணை நடிகை....

மராத்திய துணை நடிகை....

49 வயது மராத்திய துணை நடிகை அல்கா புனேகர். இவர் மராத்தி மொழி படங்களிலும், டி.வி. சீரியல்களிலும் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். தானே பகுதியில் கணவருடன் வசித்து வந்த அல்கா கடந்த டிசம்பர் மாதம் 27 ந்தேதி காணாமல் போனார்.

புகார்....

புகார்....

இது குறித்து அவரது கணவர் சஞ்சய் புனேகர் கோபுரி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், அல்கா நவி மும்பைக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 27 ந்தேதி புறப்பட்டு சென்றதாகவும், அங்கிருந்து புனே செல்ல திட்டமிட்டு இருந்தார் என்றும் கூறி இருந்தார்.

உருக்குலைந்த கார்...

உருக்குலைந்த கார்...

அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணயில், அல்கா பயணம் செய்த கார் ராய்காட் மாவட்டத்தில் காபோலி பகுதியில் 700 அடி ஆழமான பள்ளத்தாக்கில் உருக்குலைந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

செல்போன் துப்பு...

செல்போன் துப்பு...

உருக்குலைந்த காரில் போலீசார் நடத்திய சோதனையில், அல்காவின் செல்போன் சிக்கியது.அதில் அவருடன் அலோக் பலிவால் மற்றும் சஞ்சய்குமார் சோன்கர் ஆகியோர் நீண்ட நேரம் பேசியது தெரிய வந்தது.

கள்ளக்காதல்....

கள்ளக்காதல்....

சஞ்சய்குமார் கோன்கர் அல்காவின் முன்னாள் நண்பர் ஆவார். அவருக்கு பின்பு அலோக் பலிவாவால் என்பவருடன் அல்காவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. 24 வயது எம்.பி.ஏ பட்டதாரியான அலோக் பலிவால் மும்பையில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்துள்ளார். அவருடன் நடிகை அல்கா கடந்த 1 வருடமாக நெருங்கி பழகி வந்தது விசாரணையில் அம்பலமானது.

ரகசியத் திட்டம்...

ரகசியத் திட்டம்...

மேலும், கணவர் கண்டித்த போதும், அவரது எதிர்ப்பை மீறி காதலனை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார் அல்கா. அதனைத் தொடர்ந்து கணவரின் கவனத்தை திசை திருப்ப திட்டமிட்ட . அல்காவும், அவரது காதலனும் இதற்காக முன்னாள் நண்பர் சஞ்சய் குமார் உதவியை நாடியுள்ளனர்.

விபத்து...

விபத்து...

அதன் தொடர்ச்சியாக கார் விபத்து மற்றும் தானேயில் ஒரு வீட்டில் அவர்கள் இருவரையும் அடைத்து வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் நாடகம் ஆடியுள்ளார்கள்.

நாடகம் அம்பலம்...

நாடகம் அம்பலம்...

இந்நிலையில் தானேயில் அல்காவின் முன்னாள் நண்பர் சஞ்சய்குமார் போலீசில் சிக்கினார். அவர் மூலமாக நடிகை அல்கா வையும், காதலனையும் காரில் தப்பிக்க வைத்து நாடகம் ஆடியது தெரியவந்தது.

கண்டுபிடிப்பு....

கண்டுபிடிப்பு....

அதனைத் தொடர்ந்து சஞ்சய்குமாரை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னையில் நடிகை அல்கா, காதலன் அலோக் பலிவாலுடன தலைமறைவாக இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

கைது....

கைது....

இதையடுத்து தானே போலீசார் ரகசியமாக சென்னை வந்து நடிகை அல்காவையும், அவரது காதலரையும் கைது செய்துள்ளனர். சென்னையில் வைத்து அவர்கள் இருவரிடமும் தீவிரமாக விசாரணை நடத்திய போலீசார், ‘நடிகை அல்கா உயிருடன் இருப்பது எங்களுக்கு நிம்மதி. விசாரணையின் முடிவில் உண்மை வெளியே வரும்' எனத் தெரிவித்துள்ளனர்.

English summary
Marathi actress Alka Punewar, who mysteriously disappeared while on her way to Uran in neighbouring Navi Mumbai for a stage show ten days ago, was traced to Chennai, where she had been staying with her boyfriend, the police said here on Wednesday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil