twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தோனி, சச்சின், கபில்தேவ் வரிசையில் இணைகிறார் மிதாலி ராஜ்!

    By Vignesh Selvaraj
    |

    மும்பை : தோனி, சச்சின், அசாருதீன், கபில்தேவ் ஆகியோரைத் தொடர்ந்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கையும் சினிமாவாக உருவாக உள்ளது.

    சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என்ற பெருமைக்குரியவர் மிதாலி. இந்திய அணியை இரண்டு முறை உலகக் கோப்பை ஃபைனல் வரை அழைத்துச் சென்றவர். சமீபத்தில் இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்றபிறகு பெண்கள் கிரிக்கெட் அணியும் கவனத்திற்குள்ளாகி வருகிறது.

    Mithali raj enters in the queue of dhoni, sachin and kapil dev

    பெண்கள் கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கர் என அழைக்கப்படும் மிதாலி ராஜ், அர்ஜூனா விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட உயரிய விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவரது வாழ்க்கை வரலாற்றைக் குறித்த படத்தை வியாகம் 18 மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மிதாலி ராஜாக நடிக்கவிருப்பது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

    தன் வாழ்க்கை சினிமாவாக உருவாவது குறித்து மிதாலி ராஜ் கூறுகையில், 'வியாகாம் 18 பிக்சர்ஸ் உடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி. விளையாட்டை தங்களது வாழ்க்கையாகத் தேர்ந்தெடுக்கும் பல பெண்களுக்கு உந்துதலாக இப்படம் இருக்கும் என நம்புகிறேன்' என்கிறார்.

    English summary
    Mithali Raj also known as 'Sachin Tendulkar of Women Cricket' has achieved many in women cricket. 18 Motion Pictures is producing biopic about her real life.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X