»   »  'தர்மதுரை'யை பார்த்து நெகிழ்ந்தேன், கலங்கினேன், மகிழ்ந்தேன்: இயக்குனருக்கு ஸ்டாலின் கடிதம்

'தர்மதுரை'யை பார்த்து நெகிழ்ந்தேன், கலங்கினேன், மகிழ்ந்தேன்: இயக்குனருக்கு ஸ்டாலின் கடிதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை படம் பார்த்த திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் படத்தின் இயக்குனர் சீனு ராமசாமியை பாராட்டி அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா நடித்த தர்மதுரை படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. விஜய் சேதுபதிக்கு மற்றொரு ஹிட் படமாக அமைந்துள்ளது தர்மதுரை.

இந்நிலையில் படத்தை பார்த்த திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் சீனு ராமசாமியை பாராட்டி அவருக்கு 4 பக்கங்கள் கொண்ட கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,

தர்மதுரை

தர்மதுரை

தங்கள் இயக்கத்தில் உருவாக்கிய தர்மதுரை திரைப்படத்தை பார்த்தேன். தர்மதுரை 50 நாட்களுக்கு மேல் தமிழகத்தில் வெற்றி நடைபோட்டு, இன்றைக்கும் பல்வேறு திரையரங்குகளில் மாற்றித் திரையிடப்பட்டு, மக்கள் பேராதரவுடன் ஓடிக் கொண்டிருப்பது மகிழ்ச்சிக்கும், பாராட்டுக்கும் உரியது.

சமூக மாற்றம்

சமூக மாற்றம்

திரையுலகில் நீண்ட அனுபவம் கொண்ட நீங்கள் இயக்குகின்ற படங்கள் எப்போதும் ஒரு சமூக நோக்கம் கொண்டதாகவே அமைந்திருக்கும் என்பதைப் போன்றே இந்த தர்மதுரையிலும் பல சமூக மாற்றங்களை வலியுறுத்துகின்ற வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கலங்க வைக்கிறது

கலங்க வைக்கிறது

அன்புச்செல்வி தற்கொலை செய்து கொள்கிறார். தன் தற்கொலைக்கு தர்மதுரையோ, வேறு யாருமோ காரணமல்ல என்று கூறி கடிதமும் எழுதி வைத்து அவர்களையும் காப்பாற்றுகின்ற காட்சி பார்ப்பவரைக் கலங்க வைக்கிறது.

ஆண்டிப்பட்டி காத்து

கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகளில், யுவன்சங்கர் ராஜா இசையிலான பாடல்,

ஆண்டிப்பட்டி கணவாய் காத்து
ஆளைத் தூக்குதே என்ற பாடலும் இசையும் இதயத்தில் இன்னிசை ராகம் பாடிக் கொண்டே இருக்கிறது.

English summary
DMK treasurer MK Stalin has sent a four page letter to Dharmadurai director Seenu Ramasamy appreciating the movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil