»   »  மோ.. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திகில் காமெடி!

மோ.. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திகில் காமெடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தடுக்கி விழுந்தால் ஏதாவது ஒரு பேய் மீதுதான் விழ வேண்டி இருக்குமோ எனும் அளவுக்கு ஏகப்பட்ட பேய்ப் படங்கள், திகில் படங்கள் கோடம்பாக்கத்தில் தயாராகி வருகின்றன.

அந்த வரிசையில், வித்தியாசமான தலைப்போடு "மோ " என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. படப்பிடிப்பை முடித்துவிட்டு இப்பொழுது இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன (ஆனாலும் இப்போது வரை தலைப்புக்கு அர்த்தம் சொல்லாமல் அடம் பிடிக்கிறார் இயக்குநர்).

Mo.. a new horror comedy

இத்திரைப்படத்தில் சன் மியூசிக் வர்ணனையாளர் சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, காக்கா முட்டை மற்றும் பல படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், சூது கவ்வும், நேரம் ஆகிய திரைப்படங்களில் நடித்த ரமேஷ் திலக், யுத்தம் செய், முகமூடி மற்றும் பல படங்களில் நடித்த செல்வா, முன்டாசுபட்டி படத்தில் நடித்த ராமதாஸ் (முனீஸ்காந்த்), யோகி பாபு, மெட்ராஸ் மற்றும் மாரி படங்களில் நடித்த மைம் கோபி, ராஜதந்திரம் படத்தில் நடித்த சிவா ஆகியோர் நடிக்கின்றனர்.

Mo.. a new horror comedy

இப்படத்தை புவன் நல்லான் என்னும் புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் இயக்குனர் செல்வா மற்றும் ஹோசிமின் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்.

ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமனியனிடம் இணை ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த விஷ்ணு ஸ்ரீ கே ஒளிப்பதிவு செய்ய, இனிமே இப்படிதான் திரைப்படத்தின் இசை அமைப்பாளரும், ஏஆர் ரஹ்மானின் உதவியாளருமான சமீர் டி சந்தோஷ் இசையமைக்கிறார்.

Mo.. a new horror comedy

இப்படத்தை டபிள்யு டி எப் என்டர்டெயின்மென்ட் மற்றும் மூமன்ட் என்டர்டெயின்மென்ட் இனைந்து தயாரிக்கின்றனர்.

    English summary
    Mo is a new super thriller movie starring Aishwarya Rajesh and directed by Buvan Nallan.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil