»   »  உறவுக்கு அழைத்தார், தவறாக நடந்தார்: பிரபல டிவி நடிகர் மீது மாடல் அழகி புகார்

உறவுக்கு அழைத்தார், தவறாக நடந்தார்: பிரபல டிவி நடிகர் மீது மாடல் அழகி புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல தொலைக்காட்சி நடிகர் பார்த் சமதான் மீது 20 வயது மாடல் அழகி ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

கெய்சி ஹை யாரியான் இந்தி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலம் ஆனவர் பார்த் சமதான்(26). அவருடன் 4 ஆண்டுகளாக நட்புடன் பழகிய 20 வயது மாடல் அழகி ஒருவர் மும்பை போலீசில் அவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து அந்த மாடல் அழகி தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

பார்த்

பார்த்

எனக்கும், பார்த்துக்கும் இடையே நிதி பிரச்சனை எதுவும் இல்லை. என்னுடன் ஜாலியாக இருக்க நினைத்து பார்த் பல முறை எனக்கு புரபோஸ் செய்துள்ளார். அவரின் நோக்கம் தெரிந்து நான் அவரின் கோரிக்கையை ஏற்கவில்லை.

படுக்கை

படுக்கை

பார்த்தின் நட்பு வட்டாரத்தில் உள்ள பெண்கள் வேண்டுமானால் அவருடன் உறவு கொள்வதை கூல் என நினைக்கலாம். நான் அப்படிப்பட்டவள் அல்ல. நல்ல குடும்பத்தை சேர்ந்தவள்.

குடிபோதை

குடிபோதை

ஒரு நாள் பார்ட்டியில் இருந்து வீடு திரும்பும்போது குடிபோதையில் பார்த் என்னிடம் தவறாக நடந்தார். அதில் இருந்து அவருடன் பேசுவதை நிறுத்தினேன். அவர் மன்னிப்பு கேட்டதால் மன்னித்தேன்.

போன் அழைப்புகள்

போன் அழைப்புகள்

பார்த்துடன் படுக்காததால் அவர் என் புகைப்படம், செல்போன் எண்ணை வாட்ஸ்ஆப் குரூப்பில் வெளியிட்டு நான் ஒழுக்கமில்லாதவள், ஈஸியாக கிடைப்பவள் என்று தெரிவித்துள்ளார். உடனே பலரும் எனக்கு போன் செய்து தவறான காரியத்திற்கு அழைத்தார்கள்.

தாய்

தாய்

பார்த் மீது போலீசில் புகார் அளிக்க வேண்டும் என்று என் தாய் தான் எனக்கு தைரியம் அளித்தார். அதனால் துணிந்து புகார் அளித்துள்ளேன். நீதி கிடைக்கும் என நம்புகிறேன் என அந்த மாடல் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

English summary
A 20-year old model has filed a molestation complaint against ‘Kaisi Yeh Yaariyan’ actor Parth Samathan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil