»   »  பிரபல இயக்குனரை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய மாடல் அழகிக்கு 3 ஆண்டு சிறை

பிரபல இயக்குனரை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய மாடல் அழகிக்கு 3 ஆண்டு சிறை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல பாலிவுட் இயக்குனர் மாதுர் பந்தர்கரை கொலை செய்ய ஆள் அனுப்பிய வழக்கில் மாடல் அழகி ப்ரீத்தி ஜெயினுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது மும்பை நீதிமன்றம்.

பிரபல பாலிவுட் இயக்குனர் மாதுர் பந்தர்கர் தனது படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை 16 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2004ம் ஆண்டு மும்பையை சேர்ந்த மாடல் அழகி ப்ரீத்தி ஜெயின் போலீசில் புகார் அளித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2012ம் ஆண்டு அதை தள்ளுபடி செய்தது.

 கொலை சதி

கொலை சதி

மாதுர் பந்தர்கர் மீது பாலியல் புகார் தெரிவித்த பிறகு 2005ம் ஆண்டு அவரை கொலை செய்ய தாதா அருண் காவ்லியின் உதவியாளரான நரேஷ் பர்தேசியிடம் ரூ.75 ஆயிரம் கொடுத்தார் ப்ரீத்தி.

போலீஸ்

போலீஸ்

பணத்தை வாங்கிய நரேஷ் சொன்னபடி மாதுரை கொலை செய்யவில்லை. இதையடுத்து ப்ரீத்தி கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டார். அதன் பிறகு காவ்லி இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.

 கைது

கைது

மாதுர் பந்தர்கரை கொலை செய்ய ஆட்களை ஏவிய குற்றத்திற்காக ப்ரீத்தி கடந்த 2005ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

 தண்டனை

தண்டனை

12 ஆண்டுகளாக நடந்த வழக்கில் மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ப்ரீத்தி ஜெயின், நரேஷ் பர்தேசி மற்றும் சிவராம் தாஸ் ஆகியோருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.

English summary
A sessions court in Mumbai has convicted model Preeti Jain and sentenced her to three years in jail for plotting to kill film director, Madhur Bhandarkar. The court held her and two others guilty of conspiring to kill the director who she had charged with rape a few years back.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil