மாடல் அழகி தற்கொலை.. கொல்கத்தாவில் தொடரும் மர்ம மரணம்!
கொல்கத்தா : 18 வயதே ஆன மாடல் அழகி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கொல்கத்தாவில் இந்த மாதத்தில் மட்டும் ஒரே தொழிற்துறையைச் சார்ந்த 4 பெண்கள் தங்கள் வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கொல்கத்தாவில் தொடர்ந்து நிகழும் தற்கொலை திகிலூட்டுகின்றன. இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து கொல்கத்தா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரஸ்வதி தாஸ்
மேக்கப் கலைஞரும், மாடலுமான சரஸ்வதி தாஸ் நேற்று அவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சரஸ்வதி தாஸின் அப்பாவும் அவர் குழந்தையாக இருந்த பொழுதே பிரிந்துவிட்டனர். மேலும் அவர் அம்மா, பாட்டி அரவணைப்பில்தான் வளர்ந்திருக்கிறார். மேக்கப் மற்றும் மாடலிங்கில் ஆர்வமுள்ள சரஸ்வதி , தனது பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கும் டியூஷன் எடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

காரணம் தெரியவில்லை
சனிக்கிழமை சரஸ்வதி தாஸின் தாயார் வேலைக்கு சென்ற நேரம் பார்த்து பாட்டியுடன் படுத்திருந்த சரஸ்வதி தாஸ் வேறு ஒரு அறைக்கு சென்று , அங்கு தனது துப்பட்டாவால் தூக்கிட்டுள்ளார். பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சரஸ்வதி தாஸ் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சரஸ்வதி தாஸ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

தொடரும் தற்கொலை
கொல்கத்தாவில் கடந்த வெள்ளிக்கிழமை, மாடல் அழகி மஞ்சுஷா தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல, அவரது தோழியும் சக ஊழியருமான பிதிஷா டி மஜும்தார் தற்கொலை செய்துகொண்டார். மே 15ந் தேதி நடிகை பல்லபி தேவும் தனது குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கொல்கத்தாவில் கடந்த 3 வாரங்களில் மட்டும் 3 மாடல்கள் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மன அழுத்தத்தால்
இறந்த மற்ற மூன்று பெண்களுடன் சரஸ்வதிக்கு ஏதேனும் தொடர்பு இருந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், மஞ்சுஷா நியோகி மற்றும் பிதிஷா டி மஜூம்தார் ஆகியோரின் மரணங்களுக்கு இடையே தொடர்பு இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். மஞ்சுஷா தனது தோழி பிதிஷா டி மஜும்தாரின் மரணத்தால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











