»   »  "பப்ளிக்குட்டி"க்காக மோடி டிரெஸ்: நினைத்ததை சாதித்து நடிகை ராக்கி 'மகிழ்ச்சி'

"பப்ளிக்குட்டி"க்காக மோடி டிரெஸ்: நினைத்ததை சாதித்து நடிகை ராக்கி 'மகிழ்ச்சி'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிகாகோ: பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் பிறரின் கவனத்தை ஈர்க்க பிரதமர் மோடியின் புகைப்படம் அடங்கிய உடை அணிந்து நினைத்ததை சாதித்துவிட்டார். ஆனால் மோடியின் ஆதரவாளர்கள் தான் அவர் மீது கொலவெறியில் உள்ளனர்.

நானும் பாலிவுட் நடிகையாக்கும் என்று கூறி வருபவர் ராக்கி சாவந்த். விளம்பரத்திற்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவார். இதனால் அவரை பாலிவுட்காரர்கள் ஓட்டை வாய் என்கிறார்கள்.

கொஞ்ச காலமாக யாரும் ராக்கியை கவனிக்காத நிலையில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

சும்மா விடுவாரோ

சும்மா விடுவாரோ

விளம்பரம் தேட வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிய ராக்கி அமெரிக்காவில் இருந்து வந்த அழைப்பை வைத்து உலகம் முழுவதும் தன்னை பற்றி பேசும்படி செய்துவிட்டார். பிரதமர் மோடியின் புகைப்படம் அடங்கிய உடையை அணிந்து அந்த விழாவில் கலந்து கொண்டார்.

ராக்கி

ராக்கி

அவர் அணிந்திருந்த உடையில் மோடியின் கை இருக்கும் இடம் மற்றும் அவரின் பின்புறத்தில் உள்ள மோடியின் புகைப்படம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. ராக்கி வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்து மோடியின் ஆதரவாளர்கள் அவர் மீது கொலவெறியில் உள்ளனர்.

நெட்டிசன்கள்

நெட்டிசன்கள்

விளம்பரத்திற்காக இப்படியா மோசமாக நடந்து கொள்வது என்று நெட்டிசன்கள் ஒரு பக்கம் ராக்கி சாவந்தை கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறார்கள். இது இதை தானே அவர் எதிர்பார்த்து செய்தார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

ஊர், உலகம் எல்லாம் ராக்கியை திட்டியும், கிண்டல் செய்தும் கொண்டிருக்கிறது. அவரோ அப்பாடா ஏதோ விளம்பரம் தேட நம்மால் முடிந்ததை செய்து சூப்பராக ஒர்க்அவுட்டாகிவிட்டது என்பது போன்று உள்ளார்.

English summary
Bollywood actress Rakhi Sawant is happy as her publicity stunt has worked very well.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil